Friday 26 July 2019

புனித சுவக்கின், அன்னம்மாள்

புனித சுவாக்கின் மற்றும் அன்னா இவர்கள் அன்னை மரியாவின் பெற்றோர். இறைவனின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்தவர். இறைநக்பிக்கையில் சிறந்து பக்தி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தவர். நாசரேத்தில் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். செல்வமும் செல்வாக்கு இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாமல் துன்புற்றனர். அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். சுவாக்கின் ஆலயத்தில் பலி செலுத்தினார். ஆண்டவரின் இரக்கம் அவருக்கு கிடைக்க அவருக்கு கிடைக்கும்வரை காத்திருந்தார். செப, தவ, ஒறுத்தல்கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். 

  தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர். அன்னாவும், சுவக்கின் என்பவர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் . 6ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது.  புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தியைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான்.  அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்களின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 

No comments:

Post a Comment