Sunday 1 July 2018

புனித கால்

 
   இறைபக்தியில் சிறந்து வளங்கியவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டவர். செபம் செய்து அன்னையின் வழியாக இறையருளைப் பெற்றவர். இறைவனின் அழைப்புக்கு குரல் கொடுத்து உலக இன்பங்களை துறந்தார்.
இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார்.  தன்னை துன்புறுத்திய மக்களிடத்தில் அன்புடன் நடந்து கொண்டார். கனிவின் வார்த்தைகளால் தீயோரை நல்வழிப்படுத்தியவரே புனித கால். இவர் 489ஆம் ஆண்டு அவெர்ஜீன் என்னும் நாட்டில் க்ளேர்மோன்ட் என்னும் இடத்தில் பிறந்தவர்.


   கால் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்க்கை வாழவே விரும்பினார். பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று வாழ்ந்தனர். கால் இளமைப்பருவத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருணம் இன்பங்களை துறந்து இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்ய யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். பெற்றோர்கள் மிகுந்த வருத்த்துடன் எங்கும் தேடினர். கால் கோர்னோனில் இருந்த துறவு இல்லத்திற்கு சென்றார். இல்லத் தலைவர் பெற்றோரின் அனுமதி பெற்று வருமாறு கூறினார். கால் வீட்டிற்கு சென்று தனது விருப்பத்தை கூறினார். இறைவிரும்ப்பம் என்று உணர்ந்த தந்தை கால் துறவு வாழ்க்கை மேற்கொள்ள அனுமதியும் ஆசிரும் கொடுத்து அனுப்பினார்.

   கால் நற்பண்பில் சிறந்து இறையாட்சி பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். க்ளேர்மோன் என்ற ஆயரின் அருட்கரங்களால் குருவாக அருள்பொழிவு பெற்றார்.  இறைஞானத்தில் சிறந்து வாழ்வுதருகின்ற இறைவார்த்தை வாழ்வாக்கி போதித்தார். ஆஸ்ட்ரேசியா பகுதியில் நற்செய்தி அறிவித்த தருணத்தில் கால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். பின் சில ஆண்டுகளில் விடுதலையானார். 527ஆம் க்ளேர்மோன்ட் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்று சிறந்த முறையில் மக்களை இறைப்பாதையில் வழிநடத்தி 553ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment