Friday 13 July 2018

இயேசுவின் புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ்

    கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொண்டு கள்ளம் கபடம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அனைவரையும் அன்பு செய்தவர். நற்கருணை பெற்றப்பின் இயேசுவுடன் நீண்டநேரம் அன்புடன் உறவாடியவர். இயேசு கிறிஸ்துவின் உடனிருப்பை பெற்றிட தனது இதயத்தை அவருக்கு கொடுத்தவர். செல்வ செழிப்பில் வாழ்ந்தாலும் ஏழ்மையை விரும்பினார். இறைவனின் அழைப்புக்கு தன்னை அர்ப்பணம் செய்தவர். இறைவனின் மெல்லிய குரலை கேட்க தூயவராக வாழ்ந்தவரே புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ். இவர் 1900ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து நற்பண்பில் வளர்ந்து வந்தார். புனித குழந்தை இயேசுவின் தெரசாவின் சுயசரிதையைப் படித்து அவரைப்போல இயேசுவுக்கு வாழ்வை அர்ப்பணம் செய்து, அவரை அன்பு செய்ய விரும்பினார். முதல் முறையாக நற்கருணை பெற்றுக்கொண்ட நாள் இன்று முதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு வலையில் நான் சிக்கிக்கொண்டேன் என்று கூறினார். 


    இயேசுவின் தெரசாள் லாஸ் ஆன்டஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து அவருக்காக வாழ துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1919ஆம் ஆண்டு கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். இவருக்கு இயேசுவின் தெரசாள் என்ற பெயர் சூட்டப்பட்டது. கார்மெல் சயின் ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்தார். செப வாழ்வு, அமைதி, குருக்களுக்காக செபிப்பது, இறைவனை அன்பு செய்வது, இறைவார்த்தையை தியானித்து வாழ்வாக்குவது போன்ற ஒழுங்குமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார். பிறரின் நலனுக்கு அயராது உழைத்தார். அன்னை மரியாவிடம் செபித்து தூயவராக வாழ்ந்தார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பின் காரணத்தினால் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த இயேசுவின் தெரசாள் லாஸ் ஆன்டஸ் 1920ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment