Tuesday 16 January 2018

புனித அர்னால்டு ஜான்சன்


                                                                   
             இறைவனின் துணையுடன் அனைத்து செயல்களையும் நன்றாக செய்தவர். இயேசுவின் திரு இதயத்தின் மீது அதிக பற்றும் பக்தியும் கொண்டவர். இறைமாட்சிக்காக கடினமான வேலைகளையும் செய்தார். தூய ஆவியாரின் துணையுடன் நற்செயல்கள் புரிந்தவர்.  இரவும் பகலும் திருச்சபையின் வளர்ச்சிக்காக நற்கருணையின் முன்பாக கண் வழித்து செபித்தவரே புனித அர்னால்டு ஜான்சன். இவர் ஜெர்மனியில் கோச் என்னும் இடத்தில் 1837ஆம் ஆண்டு பிறந்தார்.

        அர்னால்டு ஜான்சன் பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். நாளும் இறைவார்த்தையை வாசித்து செபிக்க கற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். செபமாலைமிகுந்த பக்தியுடன் செபித்தார். குருமாணவர்களுக்கான பள்ளியில் தொடக்க கல்வியை கற்றார். கணிதம், அறிவியல் பாடத்தை மிகுந்த ஆர்வமுடன் கற்று பேரராசிரியராக பணியாற்றினார்.

          இயேசுவின் மீது மிகுந்த உறவு கொண்டு வாழ விரும்பினார். திரு இதயத்தின்மீது மிகுந்த பக்தியும் அன்பும் செலுத்தினார். ஆசிரியர் பணியை துறந்து அச்சம் தொடங்கினார். திரு இருதய சிறு தூதன் என் சிற்றிதழை ஆரம்பித்தார். தனது திறமையான எழுத்து மூலம் மறைபணியை ஆரம்பித்தார். இத்தருணத்தில் பிஸ்மார்க் அரசன் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆணை பிப்பித்தான். ஆயர்கள், குருக்கள், துறவிகள் இவர்கள் இறையழைத்தலை துறந்து கிறிஸ்துவை மறுதலிக்க சிறையில் அடைத்து துன்புறுத்திய தருணத்தில் அச்சு பிரதிகள் வழியாக அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
      கிறிஸ்துவை ஆர்வத்துடன் அறிவித்தார். அரசனால் விட்டப்பட்ட குருக்களையும், துறவிகளையும் ஒன்றிணைத்து அண்டை நாடுகளுக்கு சென்று இறைபணி செய்ய ஆவல் கொண்டார். அவ்வாறு தூய ஆவியின் தூண்டுதலால் அர்ப்பண வாழ்க்கை வாழ அருட்சகோதரிகளுக்காக 1889ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள்  தூ ஆவியார் திருத்தூது சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். இரவும் பகலும் நற்கருணை ஆராதனை நடத்தினார் துறவிகள் செப வாழ்வில் வளர வழிகாட்டினார். கிறிஸ்துவின் வாழ்வை அனைவரும் பின்பற்ற அயராது உழைத்த அர்னால்டு ஜான்சன் 1909ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment