Thursday 4 January 2018

புனித எலிசபெத் ஆன் பேலி சேற்றன்


      இறைவார்த்தை வாழ்வாக்கி நற்பண்பில் சிறந்து விளங்கினார். ஆன்மிக வாழ்வில் மிகுந்த கவனம் செலுத்தினார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இறைவனோடு உறவு கொண்டு வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். இறைவனின் அழைப்புக்கு செவிமடுத்தார். தாயை இழந்தபோது இயேசுவின் அருகில் அமர்ந்து தாயன்பை பெற்றுக்கொண்டு இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தவரே புனித எலிசபெத் ஆன் பேலி சேற்றன் என்பவர்.

       எலிசபெத் சேற்றன் நியூயார்க்கில் 1774ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் பிறந்தார். தனது மூன்றாம் வயதில் தாயை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். எலிசபெத் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். அன்பிலும், அறிவிலும், பாசத்திலும், உண்மையிலும், நற்பண்பிலும் சிறந்து விளங்கினார். தினமும் இறைவார்த்தையை வாசித்து தியானிப்பதில் கவனம் செலுத்தினார். இயேசு கிறிஸ்துவை தனது நண்பராக தேர்ந்தெடுத்தார். இவர் புரட்டஸ்டான்ட் சபையை பின்பற்றினார்.

     எலிசபெத் 1794ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் வில்லியம் மாகி சேற்றன் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார். ஐந்து பிள்ளைகளுக்கு தாயானார். வில்லியம் வணிகம் செய்து வந்தார். வணிக வியாபாரம் சார்பாக இத்தாலி சென்றார். காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். துன்பத்தின் மத்தியில் இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். எலிசபெத் தனது நண்பர் ஃபிலிச்சியுடன் கத்தோலிக்க ஆலயங்களுக்கு சென்றார். இறைவனின் திருவுளத்திற்கு தன்னை முற்றிலும் கையளித்து 1805ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார். 
      எலிசபெத் இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். இறைவனுக்கு தன்னை முற்றிலும் கையளித்தார். ஒவ்வொரு துன்பத்திலும் இறைவனின் திருவுளம் தேடினார். இறைவார்த்தையை வாழ்வாக்க முயற்சி செய்தார். தினமும் ஆர்வமுடன் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். நற்கருணை ஆண்டவரிடம் ஆர்வமுடன் உரையாடினார். அன்னை மரியாவை (மேரியை) தன் தாயகவும் ஆசிரியையாகவும் ஏற்றுக்கொண்டார். விவிலியத்தை வாழ்வின் போதனையாக, வழியாக ஏற்றுக்கொண்டு தூய வாழ்க்கை வாழ்ந்தார்.
     1809ஆம் ஆண்டு கூப்பர் என்ற செல்வந்தரின் உதவியுடன் பள்ளிக்கூடம் நிறுவினார். அனைவருக்கும் இலவசமாக கல்வி வழங்கினார். ஏழை எளிய மக்களுக்கு உதவினார். புனிதர்களின் வாழ்க்கை சுவடுகளை பின்பற்றி கிறிஸ்துவை அன்பு செய்தார். ஒவ்வொரு நிமிடமும் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்தார். இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி கூறினார். இடைவிடாமல் செபம் செய்து வாழ்ந்த எலிசபெத் 1821ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் இறந்தார்.  திருத்தந்தை 6ஆம் பவுல் 19775ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினர்.


No comments:

Post a Comment