Saturday 6 January 2018

புனித அந்த்ரே பெசத்தி


   
         புனித வளனார் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.  ஏழைகள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவினார். மிகுந்த தாழ்ச்சியும் பொறுமையும் உள்ளவர். இமறவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்து வாழ்ந்தவரே புனித அந்த்ரே பெசத்தி.
இவர் கனடா நாட்டில் மன்ரேல் என்னுமிடத்தில் 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் பிறந்தார்.

         பெசத்தி தனது 12ஆம் வயதில் பெற்றோரை இழந்து அனாதையானார். சிறுவயதில் பலவிமான வேலைகள் செய்து வாழ்ந்தார். தனிமையில் இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். செபத்திலும் தவத்திலும் தன்னை ஈடுப்படுத்தினார். குருவாக பணி செய்ய ஆவல் கொண்டு திருச்சிலுவை சகோதரர்களின் சபையில் சேர்ந்தார். புனித வளனாரிடம் பக்தி கொண்டு வாழ்ந்த பெசத்தி முதல் வார்த்தைப்பாடு பெற்றுக்கொண்டார்.

          மன்ரேலில் உள்ள நோட்ரே டாம் கல்லூரியின் வாயிற்காப்பாளராக பணி செய்தார். மாணவர்களையும் விருந்தினர்களையும் நன்கு உபசரித்தார். புனித வளனாரின் துணையால் எண்ணற்ற நன்மைகள் செய்தார். வளனாருக்கு ஆலயம் எழுப்பினார். தாழ்ச்சியுடன் தனது பணிகளை செய்தார். ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். இறைவனுக்கும் இறைமக்களுக்கும் பணிவிடை செய்த பெசத்தி 1937ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள்  இறந்தார். திருத்தந்தை 16ஆம் ஆசிர்வாதப்பர் 2010 அக்டோபர் 17ஆம் நாள் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment