Tuesday 13 March 2018

புனித யூஃப்ராசியா


           இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து தன்னொடுக்கத்திலும், செபத்திலும், நற்பண்பிலும் சிறந்து விளங்கியவர். தாழ்ச்சி, இரக்கம், கனிவு, பரிவு, அன்பு, அமைதி இவைகளுக்கு சொந்தகாரர். வாழ்வில் துன்பங்கள் சோதனைகளை சந்தித்தபோது இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித யூஃப்ராசியா. இவர் கொண்ஸ்தாந்தினோபிள் 380ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை அரசன் தியோடோசியனின் உறவினர். தந்தை இறந்தப் பின் எகிப்தில் தங்கினார்கள்.


          யூஃப்ராசியா தனது இல்லத்தின் அருகில் இருந்த துறவு இல்லத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம் துறவிகளின் வாழ்க்கை முறைகளை தனதாக்கிட விழைந்தார். செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நாளும் நற்பண்பில் வளர்ந்து வந்தார். சிறுவயதிலேயே தாய் இறந்தார். பேரரசன் தியோடோசியன் யூஃப்ராசியவிற்கு திருமண ஏற்பாடு செய்தார். யூஃப்ராசியா திருமணத்தை புறக்கணித்து கிறிஸ்துவுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்து துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார்.


         கிறிஸ்துவை அளவில்லாமல் அன்பு செய்த யூஃப்ராசியா தாழ்ச்சி, பொறுமை, இரக்கம், அன்பு ஆகிய நற்பண்பில் சிறந்து விளங்கினார். அலகையால் துன்புறுத்தப்பட்ட தருணங்களில் இறைவேண்டுதலால் சோதனைகளை வென்றார். நோயுற்ற மக்கள் மீது சிலுவை அடையாளம் வரைந்து குணப்படுத்தினார். பாவத்தின் பிடியில் சிக்குண்டு வாழ்ந்த மக்கள் விடுதல் பெற வழிகாட்டினார். ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்த யூஃப்ராசியா 410ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 13ஆம் இறந்தார்.
 

No comments:

Post a Comment