Thursday 8 March 2018

புனித இறை யோவான்


            இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். பிச்சை எடுத்து பசியைப் போக்கிக் கொண்டவர். பகலில் கப்பலில் வேலை செய்வதர். இரவு நேரங்களில் ஆலயத்திற்கு சென்று இறை வேண்டல் செய்தவர். மனமாற்றம் அடைந்தப் பின் தனது செல்வங்களை எளிய மக்களுக்கு கொடு தூயவராக வாழ்ந்தவரே புனித இறை யோவான். இவர் போர்ச்சுக்கல் நாட்டில் 1495ஆம் ஆண்டு இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தார்.


     இறை யோவான் தனது எட்டாம் வயதில் பெற்றோருக்கு தெரியாமல் ஸ்பெயின் நாட்டு குருவானவருடன் சென்றார். பெற்றோர் அவரை தேடினார்கள். மகன் கிடைக்காத தருணத்தில் மிகுந்த வேதனை அடைந்தனர்.  இறை யோவான் பிச்சை எடுத்து உணவு அருந்தினார். சில நாட்கள் முதலாளியின் ஆடுகளை மேய்த்தார். நற்பண்பில் வளர்ந்த இறை யோவானை முதலாளி மிகவும் அன்பு செய்தார். திருமண ஏற்பாடுகள் செய்தார். யோவான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஸ்பெயின் இராணுவத்தில் சேர்ந்தார்.


       அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டார். இரவு நேரங்களில் இறைவனோடு வேண்டுதல் செய்தார். அவிலா யோவானின் வாழ்வை கேட்டு மனந்திரும்பி இறைவனுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார். இறைவார்த்தையை வாசித்து வாழ்வாக்கினார். நற்பது நாட்கள் நோன்பிருந்து தனது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். தனது உடமைகள் அனைத்தும் விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். நோயாளிகளை அன்புடன் கவனித்துக் கொண்டார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறைவனுக்கும் இறைமக்களுக்காக வாழ்ந்த இறை யோவான் 1550ஆம் ஆண்டு 8ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment