Tuesday 6 March 2018

புனித கொலெற்


       கிறிஸ்துவின் துன்பப்பாடுகணை கண் முன்பாக கொண்டு தியானம் செய்து இடைவிடாமல் இறைவனின் பிரசன்னத்தில் வாழ்ந்தவர். தனது செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தவர். இறைவனோடு இணைந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். வாழ்வில் துன்பங்கள் எதிர்ப்புகளை சந்தித்த தருணங்களில் இறைவனிடம் சரணடைந்து இறைவனின் மாட்சிக்காகாக வாழ்ந்தவரே புனித கொலெற். இவர் பிரான்ஸ் நாட்டில் 1381ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 13ஆம் நாள் பிறந்தார்.


         கொலெற் குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து பெற்றோருக்கும் அயலானுக்கும் உகர்தநவராய் வாழ்ந்து வந்தார். தாயின் அரவணைப்பும் அன்பும் தூய வாழ்விற்கு அடித்தளமாக அமைந்தது. தந்தையின் வழிகாட்டுதலால் இறைவன்மீது தீராத தாகம் கொண்டார். ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். பிறருக்கு உதவி செய்வதில் கருத்துடன் செயல்பட்டார். தனது 17ஆம் வயதில் பெற்றோரை இழந்து தனிமையானார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்கி கொண்டு அன்னை மரியாவை தன் தாயாகவே ஏற்றுக்கொண்டார்.

         அன்னை மரியாவின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். செபத்திலும் தவத்திலும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டார். இயேசுவின் துன்பாடுகளை நாளும் தியானம் செய்தார். பிரான்சிஸ்கன் சபையிலிருந்து கிளாரிஸ்ட் சபையில் இணைந்தார். துறவிகளிடமிருந்த தவறுகளைசுட்டிக்காட்டி சபையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். துறவு மடங்களுக்கான நியமங்களை எழுதி கடைப்பிடிக்க சக துறவிகளை வற்புத்தினார். கடுந்தவம், தொடர் மௌனம், வெறுங்காலுடன் நடத்தல், ஆழ்நிலை தியானம், நோன்பு இருத்தல் போன்றவற்றை துறவிகள் பின்பற்ற கடுமையாக உழைத்த கொலெற் 1447ஆம் ஆண்டு மார்ச்சி 6ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment