Friday 2 March 2018

புனிதர் சிலுவையின் ஆஞ்செலா


       
        தனது வாழ்வை கைவிடப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர். இரக்கச் செயல்களை ஆர்வமுடன் செய்தார். நோயுற்ற மக்களுக்காக இறைவனிடம் மன்றாடினார்.
  இறைமக்கள் இறைநம்பிக்கையில் வளர வழி காட்டியவரே புனித சிலுவையின் ஆஞ்செலா. இவர் ஸ்பெயின் நாட்டின் செவில் எனும் நகரில், 1846ம் ஆண்டு, ஜனவரி மாதம், 30ம் நாள் பிறந்தார். ஃபெப்ரவரி மாதம் 2ம் நாளன்று, “தூய லூசியா தேவாலயத்தில்” “மரிய டி லாஸ் ஆஞ்செலஸ்” எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்றார்.

          இவரது பெற்றோர் செவில் நகரிலுள்ள “திரித்துவ சபையைச்” சேர்ந்த துறவியரின் துறவு மடமொன்றில் பணி செய்தனர். இவரது தந்தை சமையல்காரராகவும், தாயார் ஆடைகள் துவைப்பராகவும், தையல்காரராகவும் பணியாற்றினார். ஆஞ்செலா எட்டு வயதாகையில் புது நன்மை பெற்றுக்கொண்டார். தமது பன்னிரண்டு வயதில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றார். தமது 12 வயதில் காலணிகள் பழுதுபார்க்கும் கடைக்கு வேலை செய்ய சென்றார். தமது 29 வயதுவரை அங்கேயே பணியாற்றினார்.


            காலணிகள் பழுதுபார்க்கும் கடையின் மேற்பார்வையாளரான “அன்டோனியா மல்டோனடோ” எனும் பெண்மணி, மிகவும் இறைபக்தி மிகுந்தவர்.  இவரிடமிருந்து செபிக்கவும், செபமாலை செபிக்கவும், புனிதர்களின் வரலாறுகளை படிக்கவும்கற்றுக்கொண்டார். ஆஞ்செலாவுக்கு அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்” ஆன்மீக வழிகாட்டியாகவும், ஒப்புரவாளராகவும் ஆனார். 1865ம் ஆண்டு, தமது 19 வயதில், செவில் நகரிலுள்ள “கருணையின் மகள்கள்” அருட்சகோதரியர் துறவு மடத்தில் சேர்ந்தார்.காலரா நோயால் துன்பப்படுபவர்களுக்காக சேவையாற்றினார். உடல்நல குறைவினால் துறவு இல்லம் விட்டு காலணிகள் தொழிற்சாலை வேலைக்குத் திரும்பினார். 1875ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 2ம் நாள், தமது 29 வயதில், ஆஞ்செலா காலணிகள் தொழிற்சாலையை விட்டு வெளியேறினார்.


          பின் அவருடன் ஜோசஃபா, ஜுவானா மரியா, ஜுவானா மகடன்” மூன்று பெண்கள் இணைந்த்து  ஒரு ஆன்மீக சபையை நிறுவினார். அருட்தந்தை “ஜோஸ் டொர்ரெஸ்,” புதிய சமூகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றார். அவரே ஆஞ்செலாவை அதன் தலைவராக நியமித்தார். ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக சேவை செய்தனர். சிலுவையின் ஆஞ்செலா தமது நிரந்தர வார்த்தைப்பாடுகளை எடுத்துக்கொண்டார். விரைவிலேயே இவர்களது சபையின் 23 சமூகங்கள் நிறுவப்பட்டன. அன்னை சிலுவையின் ஆஞ்செலா, 1932ம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டாம் தேதி, தமது 86 வயதில் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment