Sunday 4 March 2018

புனித கேதரின் ட்ரெக்ஸல்



    கைவிடப்பட்ட ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். இரக்கச் செயல்களை ஆர்வமுடன் செய்தார்.   ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். ஏழ்மையை விரும்பி உலக செல்வத்தின்மீது பற்றற்று வாழ்ந்தார். இறைவனின் அன்புக்கு தன்னை அர்ப்பணம் செய்தவரே புனித கேதரின் ட்ரெக்ஸல். இவர் ஐக்கிய அமெரிக்க நாட்டில் 1858ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ஆம் நாள் பிறந்தார். ஒரு மனித நேயமிக்க அமெரிக்க பெண். "கேதரின் மேரி ட்ரெக்ஸல்" என்ற இயற்பெயர் கொண்டவர். ஃபிரான்சிஸ் ஆன்டனி ட்ரெக்ஸல் என்பவரது மகளாவார். இவரது தாயாரின் பெயர் ஹன்னா. கேதரின் இவர்களது இரண்டாவது மகளாவார். 


          கேதரின், "ஹெலன் ஹன்ட் ஜாக்சன்" எழுதிய புத்தகமான "அவமதிப்பின் ஒரு நூற்றாண்டு" எனும் புத்தகத்தைப் படித்தார். ஒருமுறை, ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ" அவர்களைச் சந்தித்தார்.  திருத்தந்தையோ, "நீயே ஏன் ஒரு மறைப்பணியாளராகக் கூடாது" என்று கேட்டார். திருத்தந்தையின் அழைப்பை இறையழைப்பாக ஏற்று இந்திய மக்களுக்காக உதவிர்.  "நற்கருணையின் அருட்சகோதரிகளின்" முதல் குழுவினரும் இந்திய மற்றும் கருப்பு இன மக்களுக்கான முதல் உறைவிட பள்ளியை "சான்டா ஃபே"  என்னுமிடத்தில் தொடங்கினர்.

     புனித சூசையப்பரை துணையாக கொண்டு1942ல் பதின்மூன்று அமெரிக்க மாநிலங்களில் கருப்பு இன மக்களின் குழந்தைகளுக்கான கத்தோலிக்க பள்ளிகள் நிறுவினார். நாற்பது பணி மையங்களும் 23 கிராமப்புற பள்ளிகளும் இருந்தன.  பலர் துன்பங்கள் கொடுத்து தொந்தரவு செய்தனர். "பென்ஸில்வானியா" நகரிலிருந்த ஒரு பள்ளியை எரித்தனர். பதினாறு மாநிலங்களில் இந்தியர்களுக்காக 50 பணி மையங்களை தொடங்கினார். அன்னை மரியாவிடம் அன்பும் பக்தியும் கொண்டு என்றும் தூய்மையில் வாழ செபித்து வந்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள கருப்பு இன மக்களுக்கான முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகம் என்பது அன்னை ட்ரெக்ஸலுக்கு சிகரமாக அமைந்தது.மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.


No comments:

Post a Comment