Sunday 4 March 2018

புனித கசிமிர்

       குழந்தைப்பருவம் முதல் இழைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தியும் பற்றும் கொண்டு தூயவராக வாழ்ந்தார். இரவுநேரங்களில் நற்கருணை முன்பாக செபிப்பதில் ஆர்வம் காட்டுதினார். இரக்க செயல்கள் வழியாக இறையன்பை பகர்ந்தளித்தார். நீதி நெறி பிறழாத ஆட்சி செய்தார். கற்பு நெறியை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித கசிமிர். இவர் போலந்து நாட்டில் க்ராக்கோ நகரில் அரச குடும்பத்தில் 1458ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3ஆம் நாள் பிறந்தார்.


        கசிமிர் அரசராக பிறந்தாலும் ஏழ்மையை விரும்பினார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாவிடம் பக்தி அவரது பாதுகாப்பில் வாழ்ந்தார்.  தனது ஒன்பதாம் வயதில் துளுகோஸ் என்ற குருவானவரிடம் சென்று கல்வி கற்றார். குருவானவரின் வழிகாட்டுதலால் இறைபக்தியிலும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். இறைவனின் அன்பையும் பாதுகாப்ûயும் உணர்ந்த கசிமிர் எறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

      துருக்கியிடமிருந்து ஹங்கேரியைக் காப்பாற்ற கசிமிர்  தனது 13ஆம் வயதில் அரசராக நியமிக்கப்பட்டார்.  துளுகோஸ் குருவானவர் அவருக்கு துணையாக இருந்தார். நாட்டை நீதியின் வழியில் உண்மையோடு ஆட்சி செய்தார். அவருடைய பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். திருமண வாழ்வை மறுத்து தனிமையில் இறைவனுக்காக வாழ தீர்மானித்தார். இரவுநேரங்களில் பூட்டப்பட்ட ஆலயத்தின் முன்பாக கண்விழித்து செபித்தார். இரக்கச் செயல்கள் வழியாக, நீதி நெறியும், கற்பு நெறி தவறாமல் ஆட்சி செய்த கசிமிர் 1484ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4ஆம் நாள் மரணம் வழியாக விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

No comments:

Post a Comment