Wednesday 14 March 2018

புனித மெட்டில்டா


          இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டபோது இறைவனுக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்தவர். எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தார். துறவு இல்லங்களை எழுப்பிவர். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தவரே புனித மெட்டில்டா. இவர் வெஸ்ட்பேலியா நகரில் என்ஜர்ன் என்ற இடத்தில் 895ஆம் பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் துறவு இல்லத்தில் வளர்ந்து வந்தார்.     

     மெட்டில்டா செல்வ செழிப்பில் வாழ்ந்து, ஜெர்மன் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த ஹென்றி என்பவரை திருமணம் செய்தார். மெட்டில்டா கணவரின் அன்பும் வழிகாட்டுதலும் பெற்று ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தார். நீதியுடன் செய்பட கணவருக்கு அறிவுரை கூறினார். உதவி கேட்டு வருகின்ற மக்களுக்கு தராள உள்ளத்தோடு வாரி வழங்கினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவி செய்தார். இறைவனுக்காக ஆலயங்கள் கட்ட உதவி செய்தார்.
     
      மெட்டில்டா இருப்பிள்ளைகளுக்கு தயானார். தாயின் நற்செய்களுக்கு குற்றம் சுமத்தினார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வதை தடை செய்தபோது துணிவுடன் நற்செயல்கள் செய்தார். தனது மகன் இறந்துவிடுவான் என்று முன்னறிவித்தார். தனது கணவர் இறந்தவுடன் அருகில் இருந்த துறவு இல்லத்தில் தனது வாழ்வை ஆரம்பித்தார். தியானயோகம் வழி இவர் பெற்ற தெய்வீக ஒளி எனும் கொடையும் இப்புனிதை எண்ணற்ற ஜெபங்களை இயற்றவும், பலருக்கு ஆலோசகராகவும் ஆறுதலாகவும் இருக்கவும் உதவியுள்ளன.       
      தன் தாழ்ச்சியாலும் அறிவாலும், இறைவனோடும் புனிதர்களோடும் கொண்டிருந்த ஆழமான உறவாலும், மேன்மைப் பெற்றிருந்த மெட்டில்டா, தன் துறவு மடத்தின் நவக்கன்னியர்களுக்கான, பாடற்குழுவுக்கான, பள்ளிக்கான இயக்குனராக விளங்கினார். புனித விவிலியத்தால் வழிகாட்டப்பட்டு, திருநற்கருணையால் ஊட்டம் பெற்ற புனித மெட்டில்டாவின் ஜெப வாழ்வு, திருஇதயத்தின் மீதான அவளின் பக்தியில் வெளிப்படுத்தப்பட்டு கிறிஸ்துவுடன் ஆன மிக நெருங்கிய ஐக்கியத்திற்கு அவரை வழிநடத்திச் சென்றது.செபத்திலும் தவத்லிலும் வாழ்ந்த மெட்டில்டா 968ஆம் ஆண்டு மண்ணக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாóழவில் நுழைந்தார்.


1 comment: