Friday 8 June 2018

அருளாளர் மரியம் தெரசியா

     கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை வாழ்வாக்கி அறிவித்தவர். ஏழ்மையில் இறைவனின் கரம்பற்றி நடந்தவர். கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தியவர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணித்தவர். செபம் செய்ய ஆர்வம் காட்டினார். ஏழைகளுக்கு உதவி செய்தார். நோயளாளிகளை பரிவுடன் கவனித்துக்கொண்டவரே அருளாளர் மரியம் தெரசியா. இவர் இந்திய திருநாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் புத்தன்சிரா என்னுமிடத்தில் 1876ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார்.


   மரியம் தெரசியா ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதல் செபம் செய்வதில் ஆர்வம் செலுத்தினார். நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடினார். கிறிஸ்துவுக்காக தனது கற்புநெறி வாழ்வை அர்ப்பணிக்க விரும்பினார். தனது 12ஆம் வயதில் தாயை இழந்து தவித்தார். தாயின் அன்பும் அரவணைப்பும் பாசமும் அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். திருப்பலிக்கு சென்று திருப்பலியில் பங்கேற்றார். ஏழைகளுக்கு உதவினார். சமூகத்தில் எண்ணற்ற நன்மைகள் செய்தார். இறையாட்சி பணி செய்ய தன்னுடன் மூன்று பெண்களை சேர்த்துக்கொண்டு செபம் செய்யவும், நற்செய்தியையும் அறிவித்தார். 


    மரியம் தெரசியா ஒவ்வொரு இல்லங்களுக்கு கடந்து சென்று மக்களை சந்தித்து நற்செய்தி அறிவித்தார். யோசேப்பு, மரியா, இயேசுவிடம் மிகுந்த பக்தி கொண்டு அவர்களின் துணையுடன் நன்மைகள் செய்தார். அன்னை மரியா காட்சி கொடுத்து தெரசாவை மரியம் என்று அழைக்க கூறினார். அவ்வாறு 1904ஆம் முதல் மரியம் தெரசியா என்று அழைக்கப்படுகிறார். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை தனது உடலில் பெற்று கிறிஸ்துவின் துன்பப்பாடுகளில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றிருந்தார். பாவிகள் மனமாற நோன்பிருந்து ஒறுத்தல்கள் செய்தார். 
மரியம் தெரசியா நோயாளிகளை அன்புடன் பராமரித்து நோயாளிகளை குணமாக்கும் வரம் பெற்றுக்கொண்டார்.


    கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன்பாக கண்விழித்து செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். ஒறுத்தல்கள் செய்து துறவற வாழ்வை இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்தனர்.  திருச்சபையின் சட்டங்களுக்கு உட்பட்டு 1914ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாள் திருச்சபை முறைபடி திருக்குடும்ப துறவற சபையை நிறுவினார் மரியம் தெரசியா. இறைவனுக்காக வாழ்ந்த மரியம் தெரசியா 1926ஆம் ஆண்டு ஜøன் 8ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment