Saturday 23 June 2018

ஸ்வீடன் நாட்டு புனித பிரிஜித்

     
     இறைவனுக்காக தன்னை அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்தவர். தன்னலமற்ற பிறரன்பு பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக நாளும் ஆர்வமுடன் உழைத்தவர். குழந்தைப்பருவம் முதல் திருச்சிலுûவியின் முன்பாக செபம் செய்தவர். திருச்சிலுவை ஆண்டவரை பலமுறை காட்சியில் கண்டு அவரோடு உரையாடி மகிழ்ந்தார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து வாழ்வில் சந்தித்த தோல்விகளை பொறுமையோடு ஏற்றுக்கொண்டவர். வாழ்நாளில் அன்பும் அமைதியும் பொறுமையும் மிகுந்தவராய் வாழ்ந்தவரே புனித பிரிஜித்.

      பிரிஜித் ஸ்வீடன் நாட்டில் 1303ஆம் ஆண்டு பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்று இறைஞானத்தில் சிறந்து விளங்கினார். தனது ஏழாம் வயதில் இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். இயேசுவின் துன்பாடுகளைக் காட்சியாக கண்டு இயேசுவின் துன்பப்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒருமுறை சிலுவையில் துன்புறும் இயேசுவை காட்சியில் கண்ட கண்ணீர் விட்டு அழுதார். இயேசுவிடம், “உமக்கு யார் இந்த துன்பத்தைத் தந்தார்கள்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “என் அன்பை யாரெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அவர்களே” என்று கூறினார்.

   பிரிஜித் தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். தனது தாயின் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். 18ஆம் வயதில் உல்ஃப் குட்மார்சன் என்பவரை திருமணம் செய்தார். எட்டு பிள்ளைகளுக்கு தாயானார். தனது பிள்ளை இறைபக்தியிலும் நற்பண்பில் வளர்த்தினார். உல்ஃப் குட்மார்சன் என்பவர் நோயுற்று இறந்தார். இறைவனோடு உறவு கொண்டு கடுந்தவம் செய்து வாழ்ந்தார். தனது 41ஆம் வயதில் துறவு வாழ்வை தொடங்கினார். இறைவனை அன்பு செய்து 1373ஆம் ஆண்டு இறந்தார்.   

  

No comments:

Post a Comment