Sunday 5 November 2017

பாத்திமா அன்னை

 


             போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற நகரில் 1916ஆம் ஆண்டு லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடுமேய்க்கும் சிறுவர்களுக்கு அன்னை மரியா காட்சி அளித்தார். சிறுவர்கள் ஆடுமேய்த்து கொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு புதர்ச் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியதைக் கண்டார்கள். அந்த மேகத்தின்மேல் அன்னை மரியா தோன்றி காட்சி அளித்தார். லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூவரும் அக்காட்சியைக் கண்டார்கள். 

    

        அன்னை மரியா அவர்களிடம், “நான் செபமாலையின் அன்னை” என்று அறிமுகம் செய்தார். மூன்று சிறுவர்களிடமும் ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி அதே இடத்திற்கு வருமாறு மரியா கட்டளையிட்டார். ஜøலை 13ஆம் தேதி காட்சியளித்த தருணம் நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்து,“பாவிகள் மனந்திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

          மக்கள் நித்திய நரகத்தில் விழாமல் இருக்க,“ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பாக உதவிபுரியும்” என்ற செபத்தைச் செபிக்கக் கற்றுக்கொடுத்தார். மூன்று சிறுவர்கள் பார்த்த செய்தியைக் கேள்விப்பட்ட தலைவர்கள், அவர்களைப் பல வழிகளில் விசாரணை செய்தார்கள். ஆகஸ்ட் 15ஆம் நாள் சிறுவர்கள் அன்னை மரியாவை காணச் சென்றனர். மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். இக்காட்சியின் போது, மனிதரின் தீய நடத்தையையும், இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியா முதல் உலகப்போர் விரைவில் முடிவடையும். மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் உலகப்போர் தோன்றும் என்று எச்சரித்தார்.

“கிறிஸ்துவை அறியாத மக்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் அனைவரும் மனம்திரும்பி கடவுளிடம் மன்னிப்புக் கேட்குமாறும், கிறிஸ்துவின் திருச்சிலுவை முன்பாக மண்டியிட்டு செபிக்கலாம்” என்று கூறினார். மேலும், “இறுதி காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் நடப்பர். மக்களிடையே மனக்கசப்பும், வெறுப்பும் நிலவும். மனிதர்கள் உலகை அழிக்கும் பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பர்.  இயற்கை சக்திகளால் சிறிது சிறிதாக அழிவுகள் ஏற்பட கடவுள் அனுமதிப்பார். குளிர்ந்த இரவில் ஏற்படும் கொடிய நில நடுக்கத்திற்குப் பின் உலகத்தில் பேரழிவுகள் தொடங்கும். கடவுளுக்கு விருப்பமான மக்கள் மட்டுமே தப்பித்துக்கொள்வர்” என்றார்.

அப்பொழுது அப்பகுதியில் பெரும் மழைபெய்தது. மழை பெய்தவேளையில் அன்னை மரியா காட்சி தந்த புதரும் மூன்று சிறுவர்கள் நின்றிருந்த இடமும் உலர்ந்த தரையாகவே காணப்பட்டது. “மக்கள் பலரும் அன்னை மரியா தோன்றிய மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறுவர்களிடம் மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தைப் புண்படுத்தக்கூடாது. மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்க வேண்டும்; இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும்” என்று கூறி மறைந்தார்.

No comments:

Post a Comment