Sunday 12 November 2017

புனித ஜோசப்பாத்

         
            “இயேசு கிறிஸ்துவே! இறைமகனே! இந்த ஏழை பாவிமேல் இரக்கம் வையும்” என்று இடைவிடாமல் செபித்தவர்.  நம்மை விட்டு அகன்று இருப்போருக்காக அடிக்கடி செபிக்க வேண்டும் என்றும் கூறியவர். ஆன்மாக்கள்மீது தாகம் கொண்டு மருத்துவமனை, சிறைச்சாலை, வயல்வெளிகளுக்கும் சென்று ஒப்புரவு கேட்டார். பிரிவினை சபையினரால் ஆன்மாக்களை திருடுபவர் என்று அழைக்கப்பட்டவரே புனித ஜோசப்பாத்.

           ஜோசப்பாத் 1580ஆம் ஆண்டு லித்துவேனில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். செபங்களை மனப்பாடம் செய்து இடைவிடாமல் செபித்து இறையருள் பெற்றார். வில்னாவில் வாழ்ந்த பாப்போவிக் என்பவரிடம் வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். ஒய்வு நேரங்களில் அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று செபித்தார். 
        

            தாய் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் திருச்சபையில் இணைய அரும்பாடுப்பட்டார். தனது 24ஆம் வயதில் துறவு மேற்கொண்டார். மாமிச உணவுகளை தவிர்த்தார். நோன்பிருந்து தவம் செய்து மன்றாடினார். வெறும் தரையில் படுத்து உறங்கினார். தன்னுடைய ஆன்மாவும் அயலானின் ஆன்மாவும் மீட்புபெற ஆர்வமுடன் உழைத்தார். 1609இல் குருவாக அருள்பொழிவு பெற்றார். ஏழைகள் மக்கள்மீது அளவில்லா அன்பை பொழிந்தார்.  இவரது அன்பின் பணிவிடைகளால் எண்ணற்ற மக்கள் திருச்சபையில் இணைந்தனர். 
         

         1617, நவம்பர் 12 ஆயராகவும், 1618இல் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்.  தனது புனிமான வாழ்கை வழியாக ஆன்மாக்களை மீட்டார். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்து மன்னித்தார். இவர்மீது பொறாமை கொண்ட பிரிவின சபையினர் இவரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசினர். திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1867ஆம் ஆண்டு ஜøன் 29ஆம் நாள் புனிதராக உயர்த்தினார். 



No comments:

Post a Comment