Monday 6 November 2017

நம்பிக்கையின் மரியா


 

              அன்னை மரியா, “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்ற வானதூதரின் வார்த்தையை ஏற்று கடவுளை முற்றிலுமாக நம்பினார். தம் வாழ்வின் இன்பங்கள், துன்பங்கள், இலட்சியங்கள், எண்ணங்கள், ஆற்றல் அனைத்தையும் இணைத்துத் தம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்தார். எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார். (லூக்.1:45) புனித அகுஸ்தினார், “கன்னி நம்பினார்; கன்னி நம்பிக்கையால் கருத்தரித்தார் . உடலால் கருத்தரிக்குமுன்  உள்ளத்தால் கருத்தரித்தார்” என்று அழகாகக் கூறியுள்ளார்.

       திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், “முழுத் திருச்சபைக்கும் மரியா நம்பிக்கையின் எடுத்துக்காட்டாக இருக்கின்றார்” என்று கூறியுள்ளார். அன்னை மரியா இறைவனிடம் ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார். எனவே புனிதம் மிகுந்த வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணமாக்கினார். நம்பிக்கையின் மரியாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம். அன்னையுடன் இணைந்தே செபிப்போம், நம்பிக்கையில் வளர்வோம், நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவராவோம். இறுதியாக இயேசுவுடனும், மாமரியுடனும் வாழ்ந்து விண்ணகத் தந்தையின் விண்ணகப் பேரின்பத்தில் இறைபுகழ் கீதம் பாடுவோம்.

No comments:

Post a Comment