Thursday 8 February 2018

புனித ஜெரோம் எமிலியானி



       ஆதரவற்ற மக்களை அன்பு செய்து அரவணைத்தார். “அநாதைகள், ஏழைகள், நோயுற்றோருக்குச் சிறப்பான கவனத்துடன் பணியாற்ற வேண்டும். நாம் நமது உடை, உணவு, உறையுள் அனைத்தின் வழியாகவும் ஏழைகளுக்கு உதவ வேண்டும்”  என்று கூறியவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொணடவர். ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொண்டு வாழ்ந்தவர். இறையுறவில் வளர இடைவிடாமல் செபம் செய்து வாழ்ந்தவரே புனித ஜெரோம் எமிலியானி. இவர் 1481ஆம் ஆண்டு வெனிஸ் நகரில் பிறந்தார். தனது 15ஆம் வயதில் இராணுவத்தில் சேர்ந்து வெனிஸ் நகரின் தளபதியாக பணியாற்றினர்.



          வெனிஸ் நகரம் முற்றுகையிடப்பட்டபோது ஜெரோம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாழ்வில் தனிமை ஏற்பட்டபோது இறைவனின் துணை நாடினார். கடந்துவந்த பாததைகளை ஆராய்ந்துப்பார்த்தார். வாழ்வில் செய்து தவறுகளுக்காக மனம் வருந்தினார். இறைவனோடு உள்ள உறவு அறுபட்ட நிலையை உணர்ந்ரார். தனது தவறுகளுக்காக பரிகாரம் செய்தார். தவ ஒறுத்தல்கள் வழியாக இறைவனின் அருகில் சென்றார். இறைவனின் அருட்கரம் வழிநடத்துதலை உணர்ந்து இறைவனின் விருப்பம் தேடினார்.


 சிறையில் துன்புற்ற தருணங்களில் அன்னை மரியாவின் துணை நாடினார். அன்னை மரியா பலமுறை காட்சி கொடுத்தார். ஒருமுறை அற்புதமான முறையில் சிறையிலிருந்து வெளிúற்றினார். கரங்களிலிருந்து விலங்குகளை அன்னை மரியா அகற்றினார். சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஜெரோம் அருகிலிருந்த அன்னை மரியாவின் ஆலயம் செய்து அன்னையின் பாதத்தில் தன்னை அர்ப்பணம் செய்தார். அன்னை மரியாவின் துணையை நாளும் தேடினார். இறையாட்சி பணி செய்ய விரும்பி குருத்துவ வாழ்வை தேர்ந்தொடுத்து 1518ஆம் குருவாக அருள்பொழிவு பெற்று தனது பணியை ஆரம்பித்தார்.



      அநாதைகள், ஏழைகள், நோயுற்றோருக்கு உதவினார். கிறிஸ்துவுக்காக தன்னலமற்ற பணியாற்றினார்.  உடை, உணவு, இருப்பிடம் இல்லாமல் துன்புற்ற மக்களை சந்தித்து நல்வழி காட்டினார். இரக்கச் செயல்கள் செய்தார். திருப்பலியை பக்தியுடன் நிறைவேற்றினார். இறைமக்கள் தினமும் நற்கருணை உட்கொள்ளவும், செபமாலை செபிக்கவும் வழி காட்டினார். தனது பணிகளை தொடர்ந்து செய்ய துறவற சபையை நிறுவினார். ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்த ஜெரோம் எமிலியானி 1537ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் இறந்தார்.


No comments:

Post a Comment