Friday 2 February 2018

பிப்ரவரி 01 புனித ஹென்றி மோர்ஸ்


 
            அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள வாஞ்சை கொண்டவர். கத்தோலிக்க மறையின் விசுவாசக் கோட்பாடுகள்மீது அதிக ஈர்ப்புக் கொண்டு திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் உண்மை சீடராக மாறினார். வாழ்வில் சந்தித்த துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவரே புனித ஹென்றி மோர்ஸ்.


          ஹென்றி மோர்ஸ் என்பவர் இங்கிலாந்து நாட்டில் சஃப்போக் நகரில் புராட்டஸ்டான்ட் கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தவர். சட்டக்கல்வியை கற்று கத்தோலிக்க விசுவாசக் கோட்பாடுகளை ஆர்வமுடன் கற்றுக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தார். குருவாக பணி செய்ய ஆவல் கொண்டார். 1623ஆம் குருவாக அருள்பொழிவு பெற்று கிறிஸ்துவின்  இறையாட்சி பணியை ஆரம்பித்தார்.


          1633ஆம் ஆண்டு லண்டனில் புனித கிலஸ் பங்கு தந்தையாக பணியாற்றியபோது அப்பகுதியில் கொள்ளை நோய் பரவியது. சியியவர்கள், பெரியவர்கள் என்று எண்ணற்ற மக்கள் இறந்தனர். மக்கள் மத்தியில் கிறிஸ்துவின் தூதராக இறங்கி சென்று குணப்படுத்தினார். மரணத்தருவாயில் இருந்த மக்களுக்கு நோயில்பூசுதல் அருட்சாதனம் கொடுத்தார். இறந்தோரை நல்லடக்கம் செய்தார். 1643ஆம் ஆண்டு இங்கிலந்துக்கு இறைபணி செய்ய சென்ற தருணத்தில் கவலர்கள் கைது செய்து இருட்டறையில் அடைத்து மரண தண்டனை விதித்தனர். அவ்வாறு சிறையில் இறந்தார்.

No comments:

Post a Comment