Wednesday 7 February 2018

புனித ஜீலியானா



         
          கிறஸ்துவின் அன்பை சொந்தமாக்கி ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்தவர். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைந்து அயலானின் ஆன்மிக வளர்ச்சிக்காகப் பாடுப்பட்டு உழைத்தவர்.
ஏழை மக்கள் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொள்ள அயராது உழைத்தவர். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தவரே புனித ஜீலியானா.

      

 ஜீலியானா 1270ஆம் ஆண்டு பிளாரன் நகரில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினர். செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஏழ்மையை கடைப்பிடித்து வாழ்ந்தார். குழந்தைப்பருவத்தில் தந்தையை இழந்தார். தாயின் வழிகாட்டுதலால் ஆன்மிக வாழ்வில் கவனம் செலுத்தினார். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

     

      உலக இன்பங்களை துறவற வாழ்க்கை வாழ ஆவல் கொண்டார். தாயின் அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக தாயின் அன்பு கட்டளைக்கு கீழ்ப்படிந்து பெரியப்பாவின் வழிகாட்டுதலால் தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை போல துறவற ஆடையணிந்து வாழ்ந்தார். தாயின் இறப்புக்கு பின்னர் தூய மரியின் ஊழியர் சபையின் மூன்றாம் சபை பெண்களின் மூன்றாம் சபையை ஆரம்பித்தார். 


        இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். ஆன்மிக வாழ்வில் அக்கறையற்று வாழ்ந்த மக்களை சந்தித்து இறைபக்தியில் வளர வழிகாட்டினர். ஏழை எளிய மக்களுக்கு வழிகாட்டினார். திருச்சபையின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடத்தார். தவ முயற்சிகள் மேற்கொண்டார்.  திருப்பலியை தனது உயிர்மூச்சாக மாற்றினார். நற்கருணையை தனது உணவாக மாற்றினார். அன்னை மரியாவின் துணையுடன் வாழ்ந்த ஜீலியானா தமது 71ஆம் வயதில் 1341ஆம் ஆண்டு ஜøன் 12ஆம் நாள் இறந்தார். இவர் உடல் நோய் உள்ளவர்களின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment