Saturday 3 February 2018

புனித ஆன்ஸ்கர்



       அன்னை மரியாவின் மிது பக்தியும் பற்றும் கொண்டு தோழமை உறவு கொண்டவர். அன்னை மரியாவின் அருளால் துணையால் புனிதராக மாறியவர். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிபடுத்தியவர்.  துறவு வாழ்க்கையை விரும்பி துறவியாக வாழ்ந்து இறைவனை அன்பு செய்தவரே புனித ஆன்ஸ்கர். ஆன்ஸ்கர் பிக்கார்டி என்னும் இடத்தில் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் பெற்றோரை இழந்து தவித்தார். இத்தருணத்தில் ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் சேர்ந்து கல்வி கற்றார். 
       


            துறவு இல்லத்தில் வாழ்ந்தபோது நற்பண்பில் வளர்ந்து வந்தார். செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார். அன்னை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு அன்பு செய்தார். அன்னை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்த ஆன்ஸ்கர் துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார். அனைவரும் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு வாழ அரும்பாடுப்பட்டு உழைத்தார்.  டென்மார்க் சென்று துறவிகளுடன் இணைந்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். 


        இளைஞர்களுக்கு நல் வழி காட்டினார். சிறார்களை அன்பு செய்தார். தன்னால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்தார். 822ஆம் ஆண்டு சுவீடனில் ஆசிரியராகவும் நற்செய்தியின் திருத்தூதராகவும் பணி செய்தார். இறைவார்த்தை வழியாக பலரை மனந்திருப்பினார். 831ஆம் ஆண்டு ஹம்பர்க் நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார். துறவு இல்லங்களை நிறுவுனார். திருச்சபையின் விசவாசக் கோட்பாடுகளை இறைமக்கள் பின்பற்ற வழிகாட்டினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை இறைவனிடம் கொண்டு செல்ல ஆர்வமாய் உûத்தார். நோயாளிகளை சந்தித்து வறுதல் கூறினார். நூல்கள் வழியாக கிறிஸ்துவின் அன்பு இரக்கம் மற்றும் அவரது இறையாட்சி பணியை எடுத்துரைத்த ஆன்ஸ்கர் இறந்தார்.

No comments:

Post a Comment