Tuesday 6 February 2018

புனித கொன்சாலா கார்சியா



        இயேசு கிறிஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொணட்வர். கிறிஸ்துவின் இறையாட்சி பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து தன்னலமற்ற பணிகள் வழியாக இறைவனை மாட்சி படுத்தியவர். தொழுநோயளர்களுக்கு அன்பின் பணிவிடைகள் செய்தவர். துன்பப்டுவோருக்கு ஆறுதல் கூறி வழிநடத்தியவரே புனித கொன்சாலா கார்சியா. இவர் இந்தியாவில் 1557ஆம் ஆண்டு பிறந்தவர்.
         

      கொன்சாலா தனது 25ஆம் வயதில் ஜப்பான் சென்று இயேசுசபை குருவானவர் செபஸ்டியன் என்பவருடன் இணைந்து நற்செய்தி அறிவித்தார். மக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டனர். மறைக்கல்வி கற்பித்தார். தொழுநோயளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் பணி செய்தார். சில ஆண்டுகளுக்கு பின் குருவாக அருள்பொழிவு பெற்றார். ஜப்பானில் நற்செய்தி அறிவித்த தருணத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். இறுதியாக சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.

No comments:

Post a Comment