Friday 9 February 2018

புனித மிக்வெல் கோர்டேரோ



       சிறுவயது முதல் இறைவனின் திருவுளம் தேடியவர். தினந்தோறும் தவறாமல் திருப்பலிக்கு சென்றவர். நற்கருணைமீது அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர். அன்னை மரியாவிடம் பக்தியும் பாசமும் நேசமும் கொண்டவர். குழந்தைகளை அன்பு செய்தவர். இறையாட்சி பணியை ஆர்வமுடன் செய்தவரே புனித மிக்வெல் கோர்டேரோ என்பவர்.


         மிக்வெல் கோர்டேரோ என்பவர் ஈக்குவேடார் நாட்டில் 1854ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7ஆம் நாள் பிறந்தார். பிரான்சிஸ்கோ என்பது இவரது இயற்பெயர். ஐந்து வயது வரை கால் நடக்க முடியாமல் துன்புற்றார். இறைபக்தியில் வளர்ந்த மிக்வெல் இறைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். இறைவல்லமையால் நடந்தார். இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணிக்க ஆவல் கொண்டு தனது 13ஆம் வயதில் குருத்துவ பயிற்சி பெற்றார்.


        ஆசிரியர் பணியை விரும்பினார்.  அனைவரிடமும் தோழமை உணர்வுடன் பழகினார். எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்தார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பிப்பதில் ஆர்முடன் செயல்பட்டார். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்து மற்றுள்ளவரையும் இறைபிரசன்னத்தில் வாழ பயிற்சி அளித்தார். நற்கருணை ஆண்டவரிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு வாழ்ந்தார். நவத்துறவிகளுக்கு பயிற்சி அளித்து ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய வழிகாட்டிய மிக்வெல் 1910ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment