Saturday 10 February 2018

புனித ஸ்கொலாஸ்டிகா



          இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். தவ முயற்சிகள் வழியாக இறைவனை சொந்தமாக்கினார். ஆன்மீக வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித ஸ்கொலாஸ்டிகா. இவர் இத்தாலி நாட்டில் 480ஆம் ஆண்டு இரண்டைப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் நற்பண்புகளுடன் வளர்ந்து வந்தார். புனித ஆசிர்வாதப்பர் இவருடைய சகோதரர். 

          

தாந்தையின் வழிகாட்டுதலால நற்பண்பில் வளர்ந்து வந்தனர்.  ஸ்கொலஸ்டிகாவும் அவரது சகோதரரும் இணைந்து துறவு மடத்தை ஏற்படுத்தினர். ஒருமுறை, சகோதரர்கள் இருவரும் அதேபோல் ஆசிர்வாதப்பர் மடத்தினருகே உள்ள ஒரு வீட்டில் சந்தித்து வழிபாட்டிலும் செப காரியங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆசிர்வாதப்பர் தமது மடத்திற்கு புறப்பட தயாரானார். உடனே கண்களை மூடி, கைகளை இணைத்து கூப்பியபடி செபம் செய்ய ஆரம்பித்தார்.
            

      ஸ்கொலஸ்டிகா உடனே அவர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியே ஒரு காட்டுப் புயல் சுழற்றியடிக்க தொடங்கியது. "நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்ட சகோதரனுக்கு, "நான் உன்னை வேண்டினேன், நீ கேட்க மறுத்துவிட்டாய்; நான் என் கடவுளிடம் வேண்டினேன்; அவர் செவிமடுத்தார்; ஆகவே, உன்னால் இயன்றால் நீ இப்போது என்னை விட்டு போகலாம்; நீ தாராளமாக உன்னுடைய மடத்திற்கு போ." என்று பதிலளித்தார். ஆசிர்வாதப்பர் தமது மடத்திற்கு திரும்ப இயலவில்லை. அவர்களிருவரும் அன்று இரவு  முழுதும்  செபித்தனர்  வாழ்வில் எண்ணற்ற மக்களுக்கு வழி காட்டிய ஸ்கொலாஸ்டிகா 547ஆம் இறந்தார். இவரின் ஆன்மா ஒளிரும் புறா வடிவில் விண்ணேற்றம் அடைந்நதை ஆசிர்வாதப்பர் கண்டு இறைவனை புகழ்ந்தார். 

No comments:

Post a Comment