Friday 2 February 2018

புனித ஒஸ்ட்ரவன்ட் அடபால்டு


         சமூகத்தில் இறையன்பின் பணியாளராக பணியாற்றினார். எண்ணற்ற மக்களின் ஆன்மீக தந்தையாக வாழ்ந்தார். சமூகத்தில் நற்செயல்கள் வழியாக நற்பெயர் பெற்றவர். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தினார். குடும்பத்தின் தலைவராக இருந்துக்கொண்டு நற்செயல்கள் வழியாக இறையாட்சி பணி செய்தவரே புனித ஒஸ்ட்ரவன்ட் அடபால்டு.


         ஒஸ்ட்ரவன்ட் அடபால்டு ஃபிளாரன்ஸ் நகரில் காஸ்கன் நகரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். அரசர் முதலாம் டாகோர்ட் அரண்மணையில் உயர்ந்த பதவியில் பணி செய்தார். தனது பதிவியை பயன்படுத்தி யாரையும் துன்புறுத்தாமல் தன்னால் இயன்றவரை நன்மைகள் செய்தார். காஸ்கனி இடத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டபோது அங்கு சென்றார். இத்தருணத்தில் ரிக்ட்ரூடிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.


          ஒஸ்ட்ரவன்ட் நான்கு குழந்தைகளுக்கு தந்தையானார். பிள்ளைகளை இறைபக்தியில் வளர்த்தினார். இரக்கச் செயல்கள் வழியாக மக்களுக்கு உதவிகள் செய்தார். கடும்பாமாக இணைந்து செபம் செய்தனர். திருப்பலியில் தவறாமல் கலந்து கொண்டார். நற்கருணை ஆண்டவர்மீது அதிக அன்பு செலுத்தினார். தனது கடும்பத்தை ஆண்டவரின் கரங்களில் ஒப்படைத்து வாழ்ந்தார். நற்பண்களின் நயாகனாக நன்மைகள் செய்த ஒஸ்ட்ரவன்ட் எதிரிகளால் தாக்கப்பட்டு 652ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment