Sunday 4 July 2021

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

 

   போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத் போர்ச்சுக்கல் நாட்டில் 1271ஆம் ஆண்டு பிறந்தார். எலிசபெத் அரண்மனையில் வாழ்ந்தாலும் ஏழ்மையில் வாழ்ந்தார். ஏழைகளுக்கு உதவி செய்து ஆனந்தம் அடைந்தார். அறநெறி வாழ்விலும் ஒழுக்கத்திலும் இறைபக்தியிலும் இறைவனுக்கு உகந்தவரானார். 12ஆம் வயதில் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசர் டென்னிஸ் என்பவரை திருமணம் செய்தார். 


    எலிசபெத் அரண்மணை வாசிகளிடம் அன்புடன் பழகினார். கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது இறைவேண்டல் வழி கணவரை மனம்மாற்றினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும் உதவினார். கணவர் இறந்தப்பின் மூன்றாம் பிரான்சிஸ் அசிசியார் சபையில் துறவு மேற்கொண்டு ஏழைகள், நோயுற்றோர் மத்தியில் பணி செய்தார். மக்கள் மனதில் இறையமைதி ஏற்படுத்திய எலிசபெத் 1336ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment