Thursday 1 July 2021

புனித கால்

 
    புனித கால் 489இல் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தபோது யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து புறப்பட்டு கோர்னோனில் துறவு இல்லம் சென்றார். துறவு இல்லத்தின் தலைவர் பெற்றோரின் அனுமதி பெற்று வரக்கூறினார். இறைதஞ்சமுடன் வீட்டிற்கு வந்து தனது விருப்பம் தந்தையிடம் கூறினார். தந்தை இறை திருவுளம் அறிந்து கால் துறவு மேற்கொள்ள அனுமதியும் ஆசிரும் அளித்தார். 

    அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு இறையாட்சி பணி செய்ய குருவானார். ஆயரின் ஆலோசகராக நியமனம் பெற்றார். அன்பின் கனிவின் வார்த்தைகளால் தீயோரை நல்வழிப்படுத்தினார். அறிவிலும் திறமையிலும் வளர்ந்து இறைவார்த்தை வாழ்வாக்கி போதித்தார். ஆஸ்ட்ரேசியாவில் நற்செய்தி அறிவித்தபோது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறை துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று விடுதலையானார். 527ஆம் க்ளேர்மோன்ட் மறைமாவட்டத்தின் ஆயரானார். தீயவர்களை மனமாற்றி கால் 553ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment