Friday 2 July 2021

புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன்

 

   நீரோவின் மறைக்கலகத்தின் போது திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறை காவலர்களிடம் கிறிஸ்துவை எடுத்துரைத்தனர். காவலர்கள் புனித ப்ரோசெசு மற்றும் மார்டினியன் திருத்தூதர்களின் போதனையால் ஈர்க்கப்பட்டு மனம்மாறி திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்று பகர்ந்தனர். 

        இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பருகினர். திருத்தூதர்கள் அறிவித்த  செய்தியை கிறிஸ்தவர்களுக்கு அறிவித்தனர். இதையறிந்த சிறை அதிகாரி ப்ரோசெசு, மார்டினியன் இருவரையும் அழைத்து உரோமை தெய்வமான ஜøபிடருக்கு தூபம் காட்டுமாறு கூறினார். காவலர்கள் இயேசுவின் திருநாமம் போற்றப்படுவதாக என்று புகழ்ந்தனர். இதனால் ப்ரோசெசு மற்றும் மார்டினியன் இருவருக்கும் மரணதண்டனை விதித்தனர். கிறிஸ்துவை அரசராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டதால் ப்ரோசெசு, மார்டினியன் இருவரின் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானார்கள். 

No comments:

Post a Comment