Thursday 15 July 2021

புனித பொனவெந்தூர்

 


புனித பொனவெந்தூர் இத்தாலியில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப்பருவத்தில் நோயால் பாதித்து இறக்கும் தருவாயில் புனித அசிசியாரிடம் வேண்டல் செய்து நலம் அடைந்ததால் அசிசியாரிடம் பக்தி கொண்டார். முனைவர் பட்டம் பெற்று 1248ஆம் ஆண்டு முதல் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரானார். புனித தாமஸ் அக்குவினாஸ் இவரது நண்பர். 22ஆம் வயதில் புனித பிரான்சிஸ் துறவு சபையில் சேர்ந்தார். தாழ்ச்சியின் வழியில் பயணித்து தூயவரானார். 

        பொனவெந்தூர் 1257இல் சபை தலைவரானார். கடின உழைப்பு, ஒறுத்தல் வழி சபையில் அமைதி ஏற்படுத்தினார். ஏழ்மையும், தாழ்ச்சியும் பின்பற்றி அன்புடன் நோயளிகளை நலமாக்கினார். தியானம், செபம், தவம், நற்கருணை ஆராதனைக்காக நேரங்களை செலவிட்டார். மூவேளை செபம் மாலை 6 மணிக்கு செய்வதை நடைமுறைப்படுத்தினார். சனிக்கிழமை அன்னை மரியாவுக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்தார். 1273இல் கர்தினால் ஆனார். 1274இல் கிறிஸ்தவ ஒன்றிப்பு சங்கத்தில் பங்கேற்றபோது ஜூலை15ஆம் நாள் இறந்தார்.     

No comments:

Post a Comment