Sunday 11 July 2021

புனித ஆசீர்வாதப்பர்

         

    புனித ஆசீர்வாதப்பர் 480ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். உழைக்கவும், செபிக்கவும், எல்லோருக்கும் முன்மாதிரியானார். தனது அறையில் அன்னை மரியாவின் திருச்சொரூபம் வைத்து தீபம் ஏற்றி செபித்தார். உலக இன்பங்களை துறந்து 20ஆம் வயதில் குகையில் இறைவனை தியானித்து செபம், தவம், கடின ஒறுத்தல்கள் செய்தார். திருச்சிலுவையை தனது வாழ்வின் புகலிடமாகவும், ஆறுதலாகவும், செல்வமாகவும் கொண்டிருந்தார். 


   ஆசீர்வாதப்பர் வாழ்வின் சோதனைகளை செபத்தால் வென்றார். தன்னைத் தேடிவந்த மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டி நோய்களை நலமாக்கினார். வறியவர்களுக்கு பொருளும், உணவும் வழங்கினார். துறவிகளுக்கு தலைமை தாங்கி கடின விதிமுறைகளை வழங்கியதால் ஆசீர்வாதப்பரை தலைவராக ஏற்க மறுத்தனர். ஆசீர்வாதப்பர் குடிக்கும் நீரில் விஷம் கலந்தபோது சிலுவை வரைந்ததும் குவளை உடைந்தது. 547, மார்ச் 21ஆம் நாள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பருகி இறந்தார்.   

No comments:

Post a Comment