Friday 16 July 2021

புனித மேரி மேடலின் போஸ்டல்

   

   புனித மேரி மேடலின் போஸ்டல் பிரான்ஸில் 1756, நவம்பர் 28ஆம் நாள் பிறந்தார். ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் கல்வி கற்றார். இயேசுவின்மீது அன்பு கொண்டு கற்பு வார்த்தைப்பாடு எடுத்து இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். பிரெஞ்சு புரட்சி காலத்தில் தனது வீட்டில் திருப்பலி நடத்த ஏற்பாடு செய்தார். தனது வீட்டில் நற்கருணை வைத்திருக்கவும், இறக்கும் நிலையில் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல், நற்கருணை வழங்கவும் அனுமதி பெற்றார். 

  புனித மேரி மேடலின் போஸ்டல்  கடவுள் எப்போதும் தம்முடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து அச்சமின்றி நற்செயல்கள் செய்தார். சிறியவர், இளைஞர், முதியோர் அனைவரும் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ அயராது உழைத்தார். 1805இல் இரக்கமிகு சகோதரிகள் சபையை ஆரம்பித்து தனது இறைபணியை விரிவுப்படுத்தினார். கல்வி நிறுவனங்கள் வழி நம்பிக்கையை பகிர்ந்தளித்தார். போராட்டங்கள், அச்சுறுத்தல்கள் மத்தியில் துணிவுடன் இறைபணி செய்த போஸ்டல் 1846ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் இறந்தார்.                                                 

No comments:

Post a Comment