Friday 20 October 2017

புனித செசிலியா

                 

            * “கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள்” என்று வீரமுழக்கம் செய்தவர். இவர் உரோமையில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர். சிறுவயது முதலே இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார்.எந்நாளும் இயேசுவின் திருவுளப்படி வாழ்ந்து,  அவரது நாமத்தை அறிக்கையிட்டுத் தூயவராக வாழ்ந்தார்.

*  செசிலியா, இறைவனை மாட்சிமைப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்டார். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணமாக்கி வாழ்ந்தார்.  இசைகளின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். வாழ்வு தருகின்ற, நலமளிக்கின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச்சென்றார். 

“உலகின் ஒளியாகிய கிறிஸ்துவோடு ஒன்றாக இணைந்துவிட்டேன். அவரே என் கண்களுக்கு ஒளியாக இருக்கின்றார். கிஸ்துவின் ஒளியில் வாழ்ந்து, அவரது வழியில் நடப்பதே என் பேரானந்தம்” என்றுகூறிய செசிலியாவை கிறிஸ்துவை அறியாத வலேரியன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். செசிலியாவின் இறையன்பால் வலேரியன் மனம் மாறினான்.

*  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட காரணத்தால் செசிலியாவை சிறையில் அடைக்கப்பட்டார். தெர்த்துல்லியன் கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினான்.  “நான் எவ்வளவு துன்புற்றாலும் என் இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆராதிப்பேன்” என்றுகூறிய செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்யுமாறு அரசன் கூறினான். காவலன் செசிலியாவின் தலையை வெட்டினான். இந்நிலையில் மூன்று நாள் உயிர் வாழ்ந்தார். தீப்பந்தங்களால் செசிலியாவின் மார்பகத்தை சுட்டனர். செசிலியா “ஆண்டவரே உமக்காக அர்ப்பணிக்கப்பட்ட எனது தூய உடலை தீயோனிடமிருந்து பாதுகாத்தருளும்” என்று வேண்டியதும் கீழே  விழுந்து இறந்தார். இவரது திருநாள் நவம்பர் 22. இவர் பாடகர் குழுவின் பாதுகாவலர்

                                     


1 comment:

  1. Congratulations sr. Your mission on this way way is really good. This work will be the light and shadow for everybody to those who like to lead a better life. God bless u abundantly.

    ReplyDelete