புனித வின்சென்ட் பெரர், “மரியன்னை என்றால் மதுரம், இனிமை” என்பதற்கு புனித பிரிஜித்தம்மாளின் வரலாற்றினின்று ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். புனித பிரிஜித் அம்மாள் ஓர் குடும்பத் தலைவி. அவரது மகன் சார்லஸ் போர்வீரனாக இருந்த நிலையில் தீடீரென இறந்துவிட்டார். பிரிஜித், “இறுதி வேளையில் என் மகன் என்ன ஆன்ம நிலையில் இறந்தானோ” என்று கலங்கிப் பரிதவித்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் அன்னை மரியா பிரிஜித்துக்குக் காட்சியளித்து, “மகளே கலங்காதே. உன்மகன் இறக்கும் வேளையில் அவனுக்கு அருகில் இருந்தேன். அலகைகளின் கூட்டத்தை நான் நெருங்கவிடவில்லை. சார்லஸின் ஆன்மா அமைதியாக இறைவனிடம் சென்றது” என்றுகூறி அன்னை மரியா பிரிஜித்தை அமைதிப்படுத்தினார்.
No comments:
Post a Comment