Wednesday, 6 December 2017
புனித ஜெத்ரூத்
உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இடைவிடாமல் இறைவனிடம் மன்றாடியவர். இறைவழிபாடு என்பது செபவாழ்வின் அடித்தளம் என்றுகூறி இடைவிடாமல் இறைவனை மாட்சிமைப் படுத்தியவர். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் துன்பங்களை மகிழ்வுடன் தாங்கிக்கொண்டவர். இவர் ஜெர்மனியில் 1256ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்தார்.
ஒவ்வொரு நிமிடமும் அன்னை மரியாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் பெற்று இறையுறவில் வளர்ந்து வந்தார். இறைவார்த்தையை நாளும் தியானித்தார். வார்த்தையான கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பாக பலமணிநேரம் காத்திருந்தார். இவருடை சொற்களை கேட்போர் இறையன்பால் ஈர்க்கப்பட்டனர். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர் படிக்காதோர், பணக்காரர் பாமரர் என்ற வேறுபாடு இல்லால் அனைவரிடத்திலும் நட்புடன் பழகினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment