புனித அகஸ்டின் “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்று கூறினார்.மாசற்ற குழந்தைகள் கொல்லப்பட்டதை நற்செய்தியில் காண்கின்றோம். ஏரோது ஆட்சி காலத்தில் உலகின் மீட்பர் இயேசு யூதேயாவில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். யூதர்களின் அரசர் பிறந்துள்ள செய்தியை அரசர்கள் மூலம் தெரிந்துக்கொண்டான் ஏரோது. இயேசு யூதர்களின் அரசர் என்ற காரணத்தால் ஏரோது இயேசுவை கொலைச் செய்ய தேடினான். பெத்லேமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கி மகிழ்ந்தான். மீட்பர் இயேசுவுக்காக மாசற்ற குழந்தைகள் இறந்தனர். விவரம் அறியும் முன்னே மரணத்தைத் தழுவிய இக்குழந்தைகளைத் திருச்சபை பெருமையுடன் வணங்குகிறது. ஏனென்றால் மறைக்கலகத்தில் மடிந்த முதல் குழந்தைகள் இவர்கள். இக்குழந்தைகள் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரை கையளித்தனர்.
No comments:
Post a Comment