துன்பப்படுகின்ற மக்களை பார்கின்றபோது அவர்களோடு நானும் துன்பப்படுகிறேன் என்றுகூறியவர். நோயாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். இறைமக்கள் ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய வழிகாட்டினார். கைம்பெண்களுக்கு உதவியாக வாழ்ந்தவர். கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்து நற்செய்தியை வாழ்வாக்கினார். அன்னை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவரே புனித மரிய கிராசிஃபிசா தி ரோசா. இத்தாலி நாட்டில் 1813ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 6ஆம் நாள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பவுலா ஃபிரான்செஸ்கா.
பவுலா சிறுவயது முதல் இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். தனது 10ஆம் வயதில் தாயை இழந்தார். குழந்தைப் பருவம் முதல் விசிட்டேசன் துறவற சபை அருட்சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். நாளும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்கினார். பவுலாவுக்கு இவரது தந்தை திருமண ஏற்பாடு செய்தார். தந்தையிடம் தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து துறவற வாழ்வை தேர்ந்தெடுக்க விருப்பம் தெரிவித்தார். தந்தை துறவற வாழ்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தார். இத்தருணத்தில் பங்கு குருவானவரின் துணையோடு துறவற வாழ்வை தொடர தந்தையிடமிருந்து அனுமதி பெற்றார்.
சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவினார். பிளேக் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். இவரது தந்தை சொந்தமாக நூற்பு ஆலை வைத்திருந்தார். எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தார். தமது 27ஆம் வயதில் கபிரியல்லா போர்னாடி என்ற கைம்பெண்ணின் துணையுடன் கருணை சகோதரிகள் சபையை நிறுவினார். துறவற சபைக்கு திருத்தந்தையின் அனுமதி கிடைத்தது. 1840ஆம் சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சகதுறவிகள் ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தன்னை ஒப்படைத்து அம்மா மரியே என்னை இறையன்பில் வழிநடத்தும் என்று செபித்து அன்னை அரவணைப்பில் வாழ்ந்துஸவந்தார். நற்கருணையின் முன்பாக தனது தேவைகளை எடுத்துரைத்தார். கிறிஸ்துவின் பிரசன்னத்தில் பாதங்கள் பதராமல் வாழ்ந்த பவுலா 42ஆம் வயதில் 1855ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் நாள் இயற்கை எய்தினார்.
No comments:
Post a Comment