புனித எஃபிரேம், “ஓ எம் ஆன்மாவின் நம்பிக்கையே வாழ்க! ஓ கிறிஸ்தவர்களுடைய நிச்சயமான மீட்பே வாழ்க; ஓ பாவிகளின் சகாயமே வாழ்க; விசுவாசிகளின் அரணே, உலகின் மீட்பே வாழ்க; என்று வாழ்த்தி வேண்டுகிறார்.பிற புனிதர்களும், கடவுளுக்குப் பின் நம் ஏக நம்பிக்கை மாமரி தான் என்று ஞாபகப் படுத்துகிறார்கள். எனவே அவர்கள் மரியாவை, கடவுளுக்கடுத்தபடி எம் ஏக நம்பிக்கையே” என்று அழைக்கின்றனர்.
புனித தாமசின் அருளப்பர், “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் செபமாலை வழியாக மரியன்னையைக் கூப்பிடுங்கள்” என்கிறார். அன்னை மரியா இவ்வுலக வாழ்விலும் விண்ணக வாழ்விலும் நமக்கு துணையாக வரக்கூடியவர். எல்லா புனிதர்களுடைய வாழ்வில் அன்னையின் அருட்கரமும் வழிநடத்தலும் அரவணைப்பும் இருந்தது. நமது இதயம் அன்னையிடம் அர்ப்பணிக்கவேண்டும். காரணம் அன்னையிடம் கொடுக்கின்றபோது இதயத்திலுள்ள பாவ மாசுகளை அகற்றி இறையன்பால் நிறைத்து தருவார்.தூய்மையான இதயத்தில் இறைவன் குடிக்கொள்வார்.
No comments:
Post a Comment