Saturday, 20 January 2018

புனித பபியான்



           சிறுவயது முதல் நற்பண்பில் வளர்ந்தவர். அன்பின் அமைதியின் தூதராக இறையாட்சி பணி செய்தவர்.  திருச்சபையை அன்பு செய்து திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவின் உதவியுடன் கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணம் செய்து திருச்சபையை சிறந்த முறையில் வழி நடத்தியவரே புனித பபியான். இவர் உரோம் நகரில் 200ஆம் ஆண்டு பிறந்தார்.

           பபியான் சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். கிறிஸ்துவுக்காக தன்னை அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்து சிறந்த முறையில் இறையாட்சி பணி செய்தார். கிறிஸ்துவின் வாழ்வு தருகின்ற நலமளிக்கின்ற வார்த்தை பறைசாற்றினார். திருத்தந்தை அந்தேரூஸ் இறந்தப் பின் பபியான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தருணத்தில் ஒரு புறா இவர்மீது வந்தமர்ந்தது. 


      கிறிஸ்துவின் பணியை சிறந்த முறையில் செய்தார். நற்செயல்கள் வழியாக தந்தை கடவுளை மாட்சிப்படுத்தினார். திருச்சபையில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினார்.  திருச்சபையில் நிலவிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். உரோமையை ஏழு மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் திருத்தொண்டர்களை ஏற்படுத்தினார். கிறிஸ்துவின் நற்செய்தி எங்கும் அறிவிக்க அயராது பாடுப்பட்டார். 

         பெரிய வியாழன் அன்று திரு எண்ணெய் மந்திரிக்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இறைமக்களின் நலனுக்காக பாடுப்பட்டு உழைத்தார். ஏழை எளிய மக்களை தேடிச் சென்று உதவிகரம் நீட்டினார். நற்கருணை ஆண்டவரை அளவில்லாமல் அன்பு செய்தார். தனது ஒவவொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்ணம் செய்தார். பேரரசன் தீசியுஸ் கிறஸ்தவ மக்களை துன்புறுத்தினான். கொடூரமான முறையில் கொலை செய்தான். கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். பபியான் கிறிஸ்துவை ஆர்வமுடன் பறைசாற்றியக் காரணத்தால் கொலை செய்தனர். அவ்வாறு பபியான் 250ஆம் ஜனவரி திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment