மரியாவிற்கு மூன்று வயது நடக்கும் பொழுது சிறுமியை ஆலயத்திற்குக் கூட்டிச் சென்று கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தனர். ஆலயத்தில் வேதாகமக் கூடத்தில் பயின்று, திருவுடைகள் தயாரித்து, இறைவழிபாட்டில் பங்குப்பெற்றார். இவ்வாறு பன்னிரெண்டு வயதுவரை மரியா ஆலயத்தில் தங்கிய பின்னர் வீடு திரும்பினார்.மரியா தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து, காலம் தாழ்த்தாமல், கடமைகளைச் சரிவர செய்தார். ஆலய வேதாகமக் கூடத்தின் ஒழுங்குகள், குருக்களின் அறிவுரைகளை ஏற்று நடந்தது மரியாவின் தாழ்ச்சியை, இறைவனின் அன்பை, ஞானத்தைக் குறிக்கின்றன.
இறையுறவில் வாழ்ந்து வந்த மரியா செபத்துடன் தனது வேலைகளைச் செய்தார். யூதமத நூல்களைக் குறிப்பாகப் பழைய ஆகமத்தைத் தெள்ளத்தெளிவாகக் கற்றுக்கொண்டார். இறைவார்த்தையை மனதில் தியானித்து, இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்த தருணத்தில், அவரது பெற்றோர் மரியாவை தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்பவருக்குத் திருமண ஒப்பந்தம் செய்தனர். திருமண ஒப்பந்தத்திற்குபின் மரியா நாசரேத்தில் தங்கினார்.
No comments:
Post a Comment