புனித மாக்óசிமிலியன் கோல்பே தனது 16ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அன்னை மரியாவின் கரங்களில் தம்மை முழுமையாகக் கையளித்து அன்பும், அமைதியும், பாதுகாப்பும் நிறைவாகப் பெற்று வளமுடன் வாழ்ந்தார். அன்னை மரியாவின்மீது கொண்ட பாசத்தால் ‘அமல அன்னையின் சேனை’ என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் வழியாக அகிலமெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினார். சேனையர் ஒன்றுகூடி மக்களின் ஆன்ம நலனுக்காகவும், பாவிகளின் மனமாற்றத்திற்காகவும் பரிந்துரை செபம் செய்தனர். ஏராளமான இளைஞர்கள் அமல அன்னையின் சேனையில் சேர்ந்து இறையாட்சி பணிக்காக அர்ப்பணம் செய்தனர்.
No comments:
Post a Comment