Wednesday, 3 January 2018
அன்னை மரியா
இலயோலா மாளிகையில் இஞ்ஞாசியார் மருத்துவ சிகிட்சைப் பெற்று ஓய்வு எடுத்தார். இரவு முழுவதும் கண்விழித்து தியாகத்துடன் செபித்தார். அப்பொழுது, குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்திய வண்ணமாக அன்னை மரியா இஞ்ஞாசியாருக்கு காட்சி கொடுத்தார். அத்தருணத்தில் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. தனது கடந்த கால வாழ்வில் தூய்மைக்கு எதிராகச் செய்த பாவங்கள்மீது அளவு கடந்த வெறுப்பு ஏற்பட்டது. தூய்மைக்கு எதிரான பாவச்சோதனைகளை விட்டுவிடத் துணிவும் பெற்றார். 1522ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் இலயோலா மாளிகையை விட்டு சுமார் 600கி.மீ கால் நடையாகவே நடந்து மொன்செராத்னில் உள்ள அன்னை மரியாவின் ஆலயத்திற்குச் சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment