புனித பெர்னார்து, “மரியா பாவிகளின் ஏணிப்படி என்றும். இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவப் பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கின்றார்” என்று கூறுகிறார்.
மேலும், “நோவேயின் காலத்தில் கடவுளின் கட்டளைப்படிக் கட்டப்பட்ட பேழையுடன் மரியாவை ஒப்பிடுகின்றார். நோவேயின் நாட்களில் ஜலப்பிரளயம் மனம்மாறாத பாவிகளை வாரிக்கொண்டுபோன போது, எவ்வாறு பேழையில் இடம் பெற்றிருந்த கொடிய விலங்குகள்கூடக் காப்பாற்றப்பட்டனவோ, அவ்வண்ணமே கொடிய பாவிகளுக்கும் மரியா இறை மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றார்” என்கிறார்.
No comments:
Post a Comment