சிறுவயது முதல் செபம் தனது உயிர்மூச்சாக மாற்றியவர். உத்தத்தரிக்கின்ற நிலையில் இருக்கின்ற ஆன்மாக்களின் ஈடேற்றம் பெறவும், இறைவனின் முகம் காணவும் ஒறுத்தல்கள் செய்தவர். அன்னை மரியாவிடம்மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவரே புனித கேத்தரின் தே ரிச்சி. இவர் 1522ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் தாயை இழந்தார். தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கேத்தரின் செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.
கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். அருகில் இருந்த புனித வின்சென்டின் சாமிநாதர் மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். தனது 14ஆம் வயதில் இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்ய அம்மடத்தில் துறவியாக சேர்ந்தார். 1536ஆம் ஆண்டு துறவற வார்த்தைப்பாடு கொடுத்த கேத்தரின் இறைவனுக்கு முற்றிலும் சொந்தமானார். இறைவனை அளவில்லாமல் அன்பு செய்தார். ஆன்மீக வாழ்வில் கவனம் செலுத்தி வாழ்ந்த கேத்தரின் இறைகாட்சிகள் காணும் வரம் பெற்றார். நற்கருணை வண்டவர் முன்பாக அடைக்கலம் தேடினார்.
இறைமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக உத்தத்தரிக்கிற நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக தியாகம் செய்து ஒறுத்தல் வழியாக வேண்டுதல் செய்தார். இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்துவதாக உணர்ந்தார். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய அனைவருக்கும் உதவினார். இயேசுவின் திருப்பாடுகளை நினைத்து தியானம் செய்தார். ஒறுத்தல்கள் பல செய்தார். தியாக வாழ்வின் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.
இயேசுவின் துன்பப்பாடுகளை நினைத்து கண்ணீர் சிந்தினார். இயேசு ஆறுதல் அடைய அவர் அடைந்த பாடுகளை தனது உடலில் அனுபவிக்க ஆவல் கொண்டார். இயேசுவும் அவரது துன்பப்பாடுகளை அவரது உடலில் கொடுத்தார். இந்நிகழ்வு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணி முதல் வெள்ளிக்கிழமை பற்பகல் அதே நேரம் வரை இயேசுவின் துன்பப்பாடுகளை கேத்தரின் தே ரிச்சி தனது உடலில் அனுபவித்து வாழ்ந்த இவர் 1590ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள்
No comments:
Post a Comment