- உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவி பாயும் (லூக் 2:35).- இயேசுவைக் காப்பாற்றும்பொருட்டு எகிப்துக்கு தப்பிச்செல்லுதல் (மத் 2:13-15).- காணாமல் போன இயேசுவை கண்டடைந்தது ( லூக் 2: 46).- சிலுவை சுமந்து சென்றபோது தாயும் மகனும் சந்தித்தது.- இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விட்டது.- இயேசுவின் உடலை தாய் மரியாவின் மடியில் கிடத்தியது.- இயேசுவின் உடலை கல்லறையில் அடக்கம் செய்தது (லூக்கா 23:53).
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து துன்பங்களையும் தாங்கி, இறைமகனோடு உடனிருந்தார். இயேசுவின் கல்வாரிப் பாதையில் இறுதிவரை இருந்து, தைரியமூட்டினார். கடவுளுக்காக வீரமும், துணிவும் அவரிடம் தென்பட்டது. தன் மகனுடன் இணைந்து மனுக்குலத்திற்கு விடுதலை வழங்கினார். பதுக்குவது விடுதலை அல்ல; மாறாக பகிர்வதே விடுதலை என்பதை தன் வாழ்வின் இறுதிவரை அன்னைமரியா நிரூபித்தார். மற்றவர்களின் துன்பத்தை துடைப்பதையே விடுதலையாக எண்ணினார். நாமும் நமது அன்பையும் பாசத்தையும் பொருளையும், பொன்னையும், பகிர்ந்து மற்றவர்களின் துன்பத்தில் துணையிருந்து விடுதலை பெற வழிவகுத்து, நலமான விடுதலையை காண முயல்வோம்.
No comments:
Post a Comment