Friday, 2 February 2018
மரியா இறைவனின் தாய்
ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர். இதையே கவிஞர் ஒருவர், “தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய வார்த்தைகளே இல்லை” என்கிறார். ஆம்! சாதாரண மனிதரை ஈன்ற தாயை வருணிக்கப் போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். புனித அகஸ்டின், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment