Monday, 5 February 2018
புனித ஆகத்தா
“இயேசு கிறிஸ்துவே அனைத்தின் வண்டவரே! எனது இதயத்தைப் பாரும். உமக்கு என் விருப்பம் நன்கு தெரியும். என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொள்ளும். உமது செம்மறியாகிய நான் அனைத்து தீமைகளையும் வெல்ல என்னைத் தகுதியாக்கும்” என்று நாளும் செபித்தவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது பற்றும் பக்தியும் அன்பும் கொண்டவர். அன்னை மரியாவை தனது தாயாகவே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவரே புனித ஆகத்தா.
ஆகத்தா சிசிலியில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் கிறிஸ்துவின் மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். தன்னை இறைவனுக்கு முற்றிலும் கையளித்து ஆண்டவரின் அடிûயாக வாழ்ந்து வந்தார். ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சி படுத்தினார். அழகு நிறைந்த ஆகத்தாவை பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். திருமணம் செய்து கொள்ள ஆகாத்தா மறுத்தார்.
ஆகத்தா உலக இன்பங்களை துறந்து என்றும் கன்னிமையில் வாழ விரும்பினார். உலக நாட்டங்களிலிருந்து அகன்று வாழ்ந்த ஆகத்தாவை உயர் பதவிலிருந்த குயின்சியன் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆகத்தாவை கட்டாயப்படுத்தினான். குயின்சியன் விரும்பத்திற்கு இணங்காத ஆகத்தாவை வேத விரோதிகளிடம் ஆகத்தா இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு வாழ்கிறார் என்று காட்டிக்கொடுத்தான். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக சிறையில் அடைத்து துன்புறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment