Wednesday, 7 February 2018
புனித ஜீலியானா
கிறஸ்துவின் அன்பை சொந்தமாக்கி ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளித்தவர். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைந்து அயலானின் ஆன்மிக வளர்ச்சிக்காகப் பாடுப்பட்டு உழைத்தவர். ஏழை மக்கள் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொள்ள அயராது உழைத்தவர். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி வாழ்ந்தவரே புனித ஜீலியானா.
ஜீலியானா 1270ஆம் ஆண்டு பிளாரன் நகரில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினர். செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஏழ்மையை கடைப்பிடித்து வாழ்ந்தார். குழந்தைப்பருவத்தில் தந்தையை இழந்தார். தாயின் வழிகாட்டுதலால் ஆன்மிக வாழ்வில் கவனம் செலுத்தினார். திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment