Monday, 30 October 2017
புனித ஜெரார்டு மஜெல்லா
நற்கருணையில் கிறிஸ்து மறைந்திருக்கிறார். எனது அயலானில் கிறிஸ்துவைக் காண்கிறேன் என்றுகூறி வாழ்நாள் முழுவதும் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தவர். இறைவனையும், அன்னை மரியாவையும் அளவில்லாமல் அன்பு செய்தவரே புனித ஜெரார்டு மஜெல்லா. இவர் தென் இத்தாலியில் நேப்பிள்ஸ் முரோ என்னுமிடத்தில் 1726ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் பிறந்தார். ஐந்து வயது முதல் ஆலயத்திற்கு தினந்தோறும் தன் தாயுடன் திருப்பலிக்கு செல்வது வழக்கம்.
ஒருமுறை தனது தாயுடன் ஆலயத்தில் சென்று திருப்பலியில் பங்கேற்று, நற்கருணை அருந்த வரிசையில் நின்றார். குருவானவர் மஜெல்லாவிற்கு 10வயது பூர்த்தியாகக் காரணத்தால் நற்கருணை வழங்கவில்லை. கவலையோடு வீடுதிரும்பினார். மஜெல்லாவை அன்பு செய்த இயேசு அவரது கவலையைப்போக்க விரும்பினார். அன்றிரவு மிக்கேல் அதிதூதர் தூக்கத்திலிருந்த மஜெல்லாவை எழுப்பினார். தான் கொண்டு வந்த நற்கருணையை வழங்கினார். மஜெல்லாவும் பக்தி ஆதரவோடு நற்கருணை பெற்றுக்கொண்டார்.
இறைவனை முழுமையாக நம்பினார். பகல் முழுவதும் வேலை செய்தார். இரவு முழுவதும் ஆலயத்தில் சென்று செபித்தார். இவரது தியாக வாழ்வைக் கண்ட மக்கள் சிலர் இவரை ‘வாழ்கின்ற புனிதர்’ என்று கூறினர். “நான் ஒரு புனிதனாவதற்காகச் செல்கிறேன்” என்றுகூறி இரட்சகர் சபையில் சேர்ந்தார். 1752ஆம் ஆண்டு ஜøலை 16இல் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாடுகளுடன் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எளிய பணிகள் செய்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக மாறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment