Wednesday, 4 August 2021
புனித ஜாண் மரிய வியான்னி
Monday, 2 August 2021
புனித வால்தியோஃப்
புனித வால்தியோஃப் 1095ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோரின் அன்பில் வளர்ந்து பக்தியுடன் ஆலயம் சென்று செபித்தார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரமின்றி எளியவராக வாழ்ந்தார். தூயவரான ஆல்ரெட் என்பவரை பின்பற்றி 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் செய்தார்.
தன்னலமற்ற தலைவராகவும் அன்பின் சேவகராகவும் பணிவுடன் அனைவருக்கும் பணிவிடை செய்தார். ஆயர் பதவி தன்னை தேடிவந்தபோது தாழ்ச்சியுடன் நான் தகுதியற்றவன் என்று கூறினார். இறையன்பும், கனிவும், இரக்கமும் தனதாக்கி எல்லாருக்கும் இறைபிரசன்னத்தை பகிர்ந்து அனைவரின் நன்மதிப்பையும் மரியாதையும் பெற்றார். மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆயராது உழைத்த வால்தியோஃப் 1160ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாள் இறந்தார்.
Saturday, 31 July 2021
புனித லொயோலா இஞ்ஞாசியார்
Tuesday, 20 July 2021
புனிதர்களான எலியாஸ், ஃபிளேவியன்
Monday, 19 July 2021
🔹ஜூலை -18🔹 புனித ஃபிரட்ரிக்
ஃபிரட்ரிக் 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயரானார். 829இல் மைன்ஸில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துக்கொண்டு இறைஞானம் மிகுந்த வார்த்தைகளை பேசினார். இவரது பணிகளை விரும்பாதோர் இவர்மீது பொய்குற்றம் சுமத்தியபோது இறையருளால் அமைதி காத்தார். 388, ஜூலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி கடவுளுக்கு நன்றி கூறியபோது எதிரிகள் இரண்டு போர் அவரை வெட்டி கொலை செய்தனர்.
🌷புனித அலெக்சியார்
அலெக்சியார் இறைவா! நான் கற்பு நெறி தவறாமல் தரணியில் வாழ அருள்புரிவீர் என்றார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்தனர். அலெக்ஸ் தவம் மேற்கொள்ள வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். எடேஸ்ஸôவில் 17ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். அவரது பெயரும், புகழும் நாடெங்கும் பரவியபோது தவம் குலைந்துவிடும் என்று அஞ்சி தனது நாட்டில் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் தங்கி வீரர்களின் துன்புறுத்தலை ஏற்று இறந்தார். பெற்றோர் தனது மகன் அலெக்ஸ் என்று அறிந்ததும் துயருற்று அழுது நல்லடக்கம் செய்தனர்.
புனிதர்கள் ஜஸ்தா மற்றும் ருஃபீனா
இறுதியில் ஜஸ்தா மற்றும் ருஃபீனா ஆளுநன் டயோஜெனியனுஸ் முன் நிறுத்தி கிறிஸ்துவை மறுதலிக்க இரும்பு கம்பியால் அடித்தனர். கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருந்ததால் சிறையில் அடைத்து உணவின்றி துன்புறுத்தினர். ஜஸ்தா கிறிஸ்துவின் பொருட்டு உணவின்றி இறந்தபோது அவரது உடலை கிணற்றில் வீசினர். ருஃபீனாவை தலைவெட்டி கொலை செய்தனர்.
Friday, 16 July 2021
புனித மேரி மேடலின் போஸ்டல்
புனித மேரி மேடலின் போஸ்டல் பிரான்ஸில் 1756, நவம்பர் 28ஆம் நாள் பிறந்தார். ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் கல்வி கற்றார். இயேசுவின்மீது அன்பு கொண்டு கற்பு வார்த்தைப்பாடு எடுத்து இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். பிரெஞ்சு புரட்சி காலத்தில் தனது வீட்டில் திருப்பலி நடத்த ஏற்பாடு செய்தார். தனது வீட்டில் நற்கருணை வைத்திருக்கவும், இறக்கும் நிலையில் இருக்கிறவர்களுக்கு நோயில் பூசுதல், நற்கருணை வழங்கவும் அனுமதி பெற்றார்.
புனித மேரி மேடலின் போஸ்டல் கடவுள் எப்போதும் தம்முடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து அச்சமின்றி நற்செயல்கள் செய்தார். சிறியவர், இளைஞர், முதியோர் அனைவரும் விசுவாசத்தில் உறுதியுடன் வாழ அயராது உழைத்தார். 1805இல் இரக்கமிகு சகோதரிகள் சபையை ஆரம்பித்து தனது இறைபணியை விரிவுப்படுத்தினார். கல்வி நிறுவனங்கள் வழி நம்பிக்கையை பகிர்ந்தளித்தார். போராட்டங்கள், அச்சுறுத்தல்கள் மத்தியில் துணிவுடன் இறைபணி செய்த போஸ்டல் 1846ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் இறந்தார்.
Thursday, 15 July 2021
புனித பொனவெந்தூர்
பொனவெந்தூர் 1257இல் சபை தலைவரானார். கடின உழைப்பு, ஒறுத்தல் வழி சபையில் அமைதி ஏற்படுத்தினார். ஏழ்மையும், தாழ்ச்சியும் பின்பற்றி அன்புடன் நோயளிகளை நலமாக்கினார். தியானம், செபம், தவம், நற்கருணை ஆராதனைக்காக நேரங்களை செலவிட்டார். மூவேளை செபம் மாலை 6 மணிக்கு செய்வதை நடைமுறைப்படுத்தினார். சனிக்கிழமை அன்னை மரியாவுக்கு திருப்பலி ஒப்புக்கொடுத்தார். 1273இல் கர்தினால் ஆனார். 1274இல் கிறிஸ்தவ ஒன்றிப்பு சங்கத்தில் பங்கேற்றபோது ஜூலை15ஆம் நாள் இறந்தார்.
Wednesday, 14 July 2021
புனித கமில்லஸ் தே லெல்லிஸ்
உழைப்பும் திறமையும் மிகுந்த கமில்லஸ் கப்புச்சன் சபை பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். புனித பிலிப்பு நேரியின் வழிகாட்டுதல் பெற்று புனிதப்பாதையில் பயணித்தார். தனது 32ஆம் வயதில் இயேசு சபை கல்லூரியில் இலத்தின் பயின்று குருவானார். 1584ஆம் ஆண்டு நல்மரணத்தின் தந்தையர்கள் என்ற சபையை தோற்றுவித்து பிளேக் நோய் பாதிக்கப்பட்வர்களுக்கு பணி செய்தார். நோயளிகள்மீது கருசனை கொண்டு இறைவல்லமையால் புதுமைகள் செய்தார். துன்பங்களில் மரியாவிடம் சரண் அடைந்தார். சபையின் தலைவராக நற்செய்தி அறிவித்த கமில்லஸ் 1614, ஜøலை 14ஆம் நாள் இறந்தார்.
Tuesday, 13 July 2021
இயேசுவின் புனித தெரசாள் லாஸ் ஆன்டஸ்
தெரசாள் லாஸ் ஆன்டஸ் இறைபிரசன்னத்தில் நிலைத்திருந்து நோயாளிகள் நலம்பெற இறைவேண்டல் செய்தார். கிறிஸ்துவின் ஏழ்மையில் பங்குபெற ஏழ்மையாக வாழ்ந்தார். செபவாழ்வு, குருக்களுக்கு செபிப்பது, இறைவனை அன்பு செய்வது, இறைவார்த்தையை தியானிப்பது போன்ற விதிகளை பின்பற்றினார். “இறைவனோடு வாழ்வது மண்ணில் விண்ணமன்றோ. பிறருக்கு இரக்கமும், நமக்கு கண்டிப்பும் கொண்டிருப்போம்” என்றுகூறி 1920, ஏப்ரல் 12ஆம் நாள் இறந்தார்.
Monday, 12 July 2021
புனித யோவான் கால்பர்ட்
யோவான் கால்பர்ட் ஆசிர்வாதப்பர் சபை ஒழுங்குகளையே பின்பற்றி வல்லம்ரோசா துறவு மடம் ஆரம்பித்தார். ஏழைகளின் தேவைகளை அக்கறையுடன் நிறைவேற்றினார். தன்னை நாடிவருவோரின் பசியை போக்கிட பொருள் வைப்பு அறையிலுள்ள பொருட்களை செபத்தின் வழியாக பெருக்கினார். நற்கருணை ஆண்டவரை தஞ்சமாகவும், அன்னை மரியாவை துணையாகவும் கொண்டிருந்த யோவான் 1073, ஜூலை 12ஆம் நாள் இறந்தார்.
Sunday, 11 July 2021
புனித ஆசீர்வாதப்பர்
ஆசீர்வாதப்பர் வாழ்வின் சோதனைகளை செபத்தால் வென்றார். தன்னைத் தேடிவந்த மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டி நோய்களை நலமாக்கினார். வறியவர்களுக்கு பொருளும், உணவும் வழங்கினார். துறவிகளுக்கு தலைமை தாங்கி கடின விதிமுறைகளை வழங்கியதால் ஆசீர்வாதப்பரை தலைவராக ஏற்க மறுத்தனர். ஆசீர்வாதப்பர் குடிக்கும் நீரில் விஷம் கலந்தபோது சிலுவை வரைந்ததும் குவளை உடைந்தது. 547, மார்ச் 21ஆம் நாள் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பருகி இறந்தார்.
Saturday, 10 July 2021
புனித ஃபெலிசித்தா, அவரது ஏழு மகன்கள்
கிறிஸ்துவின் பொருட்டு துன்பங்களை மகிழ்வுடன் ஏற்ற ஃபெலிசித்தா தனது ஏழு மகன்களிடம், “பிள்ளைகளே! வானத்தை அண்ணார்ந்து பாருங்கள். இயேசு உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவரின் அன்பில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் ஆன்மாவைக் காத்துக்கொள்ள உறுதியுடன் போராடுங்கள்” என்றார். 165ஆம் ஆண்டு ஃபெலிசித்த அவரது மகன்களை கசையால் அடித்தும், தடியால் அடித்தும், தலைவெட்டியும் கொலை செய்தனர்.
Friday, 9 July 2021
புனித எஸ்பேரியஸ், ஸோவே
புனிதர்களான எஸ்பேரியஸ் மற்றும் ஸோவே இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ தம்பதிகள். இவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர். பம்பிலியாவில் கிறிஸ்துவை அறியாத கட்டுலஸ் என்பவரின் வீட்டில் அடிமைகளாக வேலை செய்தனர். முதலாளி கட்டுலஸ்க்கு மகன் பிறந்ததும் அவர் வழிபடும் தெய்வ சிலைக்கு படையல் கொடுக்க ஏற்பாடு செய்தான். அந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
எஸ்பேரியஸ் குடும்பம் பங்கேற்கவில்லை. முதலாளி ஸ்பேரியஸ் குடும்பத்தை அழைத்து கோபத்துடன் அவர் வணங்கும் தெய்வ சிலையை வணங்குமாறு சொன்னான். கிறிஸ்துவை அரசராக ஏற்ற ஸ்பேரியஸ், úஸôவே இருவரும் தலைவனின் கட்டளையைப் புறக்கணித்து என்றும் வாழும் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டனர். கோபம் அடைந்த கட்டுலஸ், எஸ்பேரியஸ் அவரது மனைவி இரண்டு குழந்தைகளையும் கொன்று நெருப்பு சூளைக்கு தூக்கிப்போட்டனர். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு சான்றாக வாழ்ந்த எஸ்பேரியஸ் அவரது குடும்பமும் 127ஆம் ஆண்டு இறந்தனர்.
Wednesday, 7 July 2021
புனித பான்றேனஸ்
பான்றேனஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து ஞானமும், அறிவுதிறனும் பெற்று தாழ்ச்சியுடன் வாழ்ந்தார். தனது வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்தவரானார். திருத்தூதர்களின் சிந்தனைகளை மக்களுக்கு போதித்தார். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி அமைதியில் வாழ்ந்தார். தன்னிடம் வந்தவர்களை இறையன்பால் இறைபிரசன்னத்தால் நிறைத்தார். நற்செய்தி இந்தயாவிலும் அறிவித்து எண்ணற்றோரை மனமாற்றினார். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து ஓர் இறைவாக்கினராக இறைபணி செய்த பான்றேனஸ் 216ஆம் ஆண்டு இறந்தார்.
புனித மரிய கொரற்றி
மரிய கொரற்றியின் குடும்பம் உரோமை சென்று மாசெலெனி பிரபு வீட்டில் வேலை செய்தனர். அதேவீட்டில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையான அலெக்ஸாண்டரும் இருந்தான். அலெக்ஸாண்டர் மரிய கொரற்றியை பாவம் செய்யத் தூண்டினான். தூயவரான கொரற்றி பாவம் செய்யக்கூடாது என்றார். மரிய கொரற்றி வீட்டில் தனிமையில் இருந்தபோது அலெக்ஸாண்டர் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினான். மறுத்த மரிய கொரற்றியை தரதரவென்று மாடிக்கு இழுத்து சென்று கத்தியால் 14 முறை குத்தி ஜூலை 6ஆம் நாள் கொலை செய்தான்.
Monday, 5 July 2021
புனித அந்தோனி மரிய சக்கரியா
சக்கரியா மிலான் சென்றபோது மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு துயருற்றவர்களுக்கு உதவினார். மக்களின் ஆடம்பர வாழ்வு, ஏற்றத்தாழ்வுகள், அரசியல் கொள்கைகள், லூத்தர் போதனையால் திருச்சபையில் பிளவுகள் ஏற்பட்ட நிலையை கண்டார். மக்களுக்கு உதவிட சக்கரியா 5 சகோதரர்களுடன் துறவு சபை நிறுவினார். இறைவார்த்தை, திருச்சபையின் விசுவாச உண்மைகளை போதித்தார். மக்கள் திருச்சிலுவை மீது அன்பு கொண்டு சிலுவையில் அடைக்கலம் தேடவும், நற்கருணை ஆராதனை செய்யவும் கற்பித்த சக்கரியா 1039ஆம் ஆண்டு இறந்தார்.
Sunday, 4 July 2021
போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்
எலிசபெத் அரண்மணை வாசிகளிடம் அன்புடன் பழகினார். கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது இறைவேண்டல் வழி கணவரை மனம்மாற்றினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும் உதவினார். கணவர் இறந்தப்பின் மூன்றாம் பிரான்சிஸ் அசிசியார் சபையில் துறவு மேற்கொண்டு ஏழைகள், நோயுற்றோர் மத்தியில் பணி செய்தார். மக்கள் மனதில் இறையமைதி ஏற்படுத்திய எலிசபெத் 1336ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4ஆம் நாள் இறந்தார்.
Saturday, 3 July 2021
புனித தோமையார்
தோமையார் அரசனிடமிருந்து பெற்ற பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இதனால் அரசன் தோமாவை சிறையில் அடைத்தான். அரசனின் சகோதரன் காத் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து தனது அண்ணன் கனகவில் தோன்றி, விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நான் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அரசன் மனம் மாறினான். 52ஆம் ஆண்டு கேரளா வந்தார். அரசன் மாஸ்டாய் என்பவரின் மனைவி மக்கள் மற்றும் ஏராளானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் தோமாவைப் பெரியமலை பகுதியில் ஈட்டியால் குத்தி கொலை செய்தார்கள்.
Friday, 2 July 2021
புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன்
இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பருகினர். திருத்தூதர்கள் அறிவித்த செய்தியை கிறிஸ்தவர்களுக்கு அறிவித்தனர். இதையறிந்த சிறை அதிகாரி ப்ரோசெசு, மார்டினியன் இருவரையும் அழைத்து உரோமை தெய்வமான ஜøபிடருக்கு தூபம் காட்டுமாறு கூறினார். காவலர்கள் இயேசுவின் திருநாமம் போற்றப்படுவதாக என்று புகழ்ந்தனர். இதனால் ப்ரோசெசு மற்றும் மார்டினியன் இருவருக்கும் மரணதண்டனை விதித்தனர். கிறிஸ்துவை அரசராகவும் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டதால் ப்ரோசெசு, மார்டினியன் இருவரின் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியானார்கள்.
Thursday, 1 July 2021
புனித கால்
அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு இறையாட்சி பணி செய்ய குருவானார். ஆயரின் ஆலோசகராக நியமனம் பெற்றார். அன்பின் கனிவின் வார்த்தைகளால் தீயோரை நல்வழிப்படுத்தினார். அறிவிலும் திறமையிலும் வளர்ந்து இறைவார்த்தை வாழ்வாக்கி போதித்தார். ஆஸ்ட்ரேசியாவில் நற்செய்தி அறிவித்தபோது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சிறை துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று விடுதலையானார். 527ஆம் க்ளேர்மோன்ட் மறைமாவட்டத்தின் ஆயரானார். தீயவர்களை மனமாற்றி கால் 553ஆம் ஆண்டு இறந்தார்.
Wednesday, 30 June 2021
புனித பேதுரு மற்றும் புனித பவுல்
திருச்சபையின் இரண்டு தூண்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல். இயேசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பேதுரு பெத்சாய்தா நகரில் பிறந்து கப்பர்நகூமில் குடியேறிய யோனாவின் மகன். பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியை பெற்று போதித்த முதல் போதனையில் 3000 பேர் திருமுழுக்குப் பெற்றனர். பாலஸ்தீனாவில் பணியாற்றினார். முடவனுக்கு இயேசுவின் பெயரால் குணம் கொடுத்தார். 67இல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
புனித பவுல் தர்சு நகரில் பிறந்தார். யூத ரபி கமாலியேல் என்பவரிடத்தில் திருச்சட்டத்தில் பயிற்சி பெற்றார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார். இறைவனின் அழைப்பு பெற்று சவுல்þபவுலாக மாறி நற்செய்தி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத இடங்களில் நற்செய்தி அறிவித்தார். தன் சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாக வாழ்ந்த பவுல் 67ஆம் ஆண்டு நீரோ மன்னனின் காலத்தில் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்
64ஆம் ஆண்டு பேரரசர் நீரோ தனது அரண்மனையை விரிவுப்படுத்த உரோமையில் தீ வைத்தார். மக்கள் கோபம் கொண்டு கொதித்தனர். மக்கள் தனக்கு எதிராக பிரச்சனை எழுப்புவதை அறிந்த பேரரசன் கிறிஸ்தவர்கள் தான் உரோமை நகருக்கு தீ வைத்தார்கள் என்றுகூறி மக்களை நம்பவைத்தார். மக்களின் கோபம் முழுவதும் கிறிஸ்தவர்கள்மீது திரும்பியது. குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விலங்குகளுக்கும், தீக்கும் இரையானார்கள்.
Monday, 28 June 2021
புனித ஐரனியஸ்
ஐரனியஸ் லுக்குனம் பகுதிக்கு திரும்பியதும் ஆயரானார். 24 ஆண்டுகள் அமைதியுடன் ஆயராக இறைபணி செய்தார். சிந்தனைத்துவக் கருத்துக்கள், தப்பறைகள் ஆகியவற்றிற்கு எதிராக நூல்கள் எழுதினார். புதிய ஏற்பாட்டின் அதிகாரப்பூர்வ பதிப்புகள் உருவாக வழி செய்த ஐரனியஸ் மறைசாட்சியாக இறந்தார்.
Sunday, 27 June 2021
அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில்
Saturday, 26 June 2021
புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர்
Friday, 25 June 2021
புனித வில்லியம்
Thursday, 24 June 2021
புனித திருமுழுக்கு யோவான்
Wednesday, 23 June 2021
புனித ஜோசப் கஃபாசோ
தூரின் நகரில் குருமடத்தில் அறநெறி ஆசிரியராகவும் அதிபராகவும் பணி செய்தார். நற்கருணை பக்திக்கு முதலிடம் கொடுத்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழி இறை மன்னிப்பை மக்களுக்கு அனுபவமாக்கினார். ஆன்ம ஆலோசகராகவும் சமூக நலனில் அக்கறை உள்ளவராகவும் இருந்தார். ஏழைகள் ஆதரவற்றோருக்கு ஆதரவு அளித்தார். தானம், தவம், ஒறுத்தல் வழி இறைவனை மாட்சிப்படுத்திய ஜோசப் 1860ஆம் ஆண்டு ஜøன் 23ஆம் நாள் இறந்தார்.
Saturday, 19 June 2021
புனித ரோமுவால்ட்
இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து நற்செய்தி போதித்து பல்வேறு துறவு இல்லங்கள் நிறுவினார். சென்ற இடமெல்லாம் துறவு இல்லம் நிறுவினார். இறைவார்த்தை வாழ்வாக்கி ஆன்மாவின் உணவாகவும், வாழ்வின் சட்டமாக கொண்டு பயணித்தார். இறைவேண்டலில் நிலைத்திருந்து இடைவிடாமல் இறைவனுக்கு நன்றிகூறி இறையாட்சி பணி செய்த ரோமுவால்ட் 1072ஆம் ஆண்டு ஜøன் 19ஆம் நாள் இறந்தார்.
புனித மாற்கு மற்றும் மார்செலியன்
மாற்கு, மார்செலியன் இருவரும் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டனர். உரோமை தெய்வத்திற்கு வணக்கம் செலுத்துமாறு நீதிபதி கட்டளையிட்டார். உரோமை தெய்வத்தை வணங்காமல் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டபோது மரண தண்டனை விதித்து 286ஆம் ஆண்டு ஜøன் 18ஆம் நாள் கொலை செய்தனர்.
Thursday, 17 June 2021
புனித கிரகோரி பார்பரீகோ
1657 இல் ஜூலை 9 ஆம் நாள் பெர்காமோ மறைமாவட்டவத்தின் ஆயரானார். 1660ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் கர்தினாலானார். நூலகங்கள் நிறுவி கல்வி பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். திருதெந்து பொதுச்சங்கத்தின் முடிவுகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேய்ப்புப்பணி சந்திப்பு மையங்கள் தொடங்கினார். இறைபணிகளை ஆர்வமுடன் செய்த கிரகோரி 1697ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாள் இறந்தார்.
Wednesday, 16 June 2021
புனித யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ்
மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி செபித்தார். இரக்கச் செயல்கள் வழி மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். வசதியானவர்களிடம் உதவி பெற்று ஏழைகளின் துயர் போக்கினார். பாலியல் தொழில் வழி நிம்மதியை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தார். 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நற்செய்தி அறிவித்து பலரை மனம்மாறினர். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்த யோவான் 1640ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் இறந்தார்.
Tuesday, 15 June 2021
புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக்
திருப்பலியில் தவறாமல் பங்கேற்றார். மறைக்கல்வி, கத்தோலிக்க விசுவாசம் பயின்றார். ஆடுகள் மேய்கும்போது செபமாலை செபித்தார். உடல்நோய், ஆதரவற்ற நிலையை தன்னொடுக்க தவமுயற்சி வழி ஆசீர்வாதமாக மாற்றினார். நற்கருணைமீதும் அன்னை மரியாவின்மீதும் ஈடு இணையற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். எளிமையிலும், இகழ்ச்சியிலும், வறுமையிலும் இறைகரம் பற்றி வாழ்ந்த ஜொóமேன் 1061ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.
Monday, 14 June 2021
புனித மெத்தோடியஸ்
மெத்தோடியஸ் திருத்தந்தை முதலாம் பாஸ்காவை சந்தித்து இந்நிலையை எடுத்துரைத்து தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். மிக்கேல் அரசர் ஆட்சி செய்த சிலநாட்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டார். மெத்தோடியûஸ கைது செய்து அக்ரிதா தீவில் சிறையில் வைத்தான். 3ஆம் மிக்கேலின் தாயின் ஆட்சியில் மெத்தோடியஸ் விடுதலையானார். 842 இல் மெத்தோடியஸ் தலைமையில் ஆயர் மன்றம்கூடி சுரூப வழிபாட்டை அங்கீகத்தது. மெத்தோடியஸ் 847, ஜூன் 14ஆம் நாள் இறந்தார்.
Sunday, 13 June 2021
புனித பதுவை அந்தோணியார்
ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.
தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவானார். 1220ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதலைப் பின்பற்றினார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறையருள் பெற்று இறைமக்களின் நலன் முன்னிட்டு புதுமைகள் செய்தார். திருச்சபையின் மறைவல்லுநர்; திருமறையைப் பாதுகாத்து நற்செய்தியை சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்து 1231ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் இறந்தார்.
Saturday, 12 June 2021
ஸகாகுன்நகர் புனித யோவான்
கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து ஆன்மாக்களை மீட்டார். ஒறுத்தல், தன்னொடுக்கம், ஏழ்மையை கடைப்பிடித்து ஏழைகளுக்கு பணி செய்தார். நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி நலமாக்கினார். 1464இல் புனித அகுஸ்தினாரின் துறவு மடத்தில் துறவியாக வாழ்ந்தார். அயலானின் உள்ளுணர்வுகளை அறிந்த நற்செய்தி வழி பாவிகளை மனந்திரும்பினார். சமூகத்தில் மக்களை துன்புறுத்தியவர்களை கண்டித்தபோது பொறாமை கொண்ட சமூக விரோதிகள் உணவில் விஷம் கலந்து கொடுத்தபோது 1479ஆம் ஆண்டு இறந்தார்.
Friday, 11 June 2021
புனித பர்னபா
Thursday, 10 June 2021
புனித கெட்டூலியஸ்
Wednesday, 9 June 2021
புனித எஃப்ரேம்
புனித எஃப்ரேம் சிரியா நிசிபிஸ் நகரில் 306ஆம் ஆண்டு பிறந்தார். நிசிபிஸ் நகர ஆயரிடம் கல்வி கற்று நற்பண்பில் வளர்ந்தார். இளம்பருவத்தில் திருமுழுக்குப் பெற்று திருத்தொண்டரானார். கிறிஸ்தவர்களுக்கு ஆதராவு அளித்த உரோமை பேரரசர் முதலாம் கான்ஸ்டன் மறைவுக்குப் பின் பெர்சிய அரசன் இரண்டாம் ஷாபர் நிசிபிஸ் நகரை முற்றுகையிட்டபோது எஃப்ரேம் இறைவேண்டல் வழி ஆயரை காப்பாற்றினார்.
எஃப்ரேம் இறைவன் செய்த புதுமைகளுக்கு பாடல்கள் மூலம் நன்றி கூறினார். 364இல் நாட்டை விட்டு வெறியேறி 364இல் எதேசா மலைக்கு சென்றார். 372 எதேசாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது பசியால் வாடியவர்களுக்கு பிச்சை எடுத்து அவர்களின் பசி போக்கினார். தப்பரைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். மரியாவின் அன்பு மகனாக வாழ்ந்தார். புகழ்மிக்க ஆசிரியர், கவிஞர், மறையுரையாளர், நம்பிக்கையின் காவலர், தூய ஆவியின் புல்லாங்குழல் என்று அழைக்கப்பட்ட எஃப்ரேம் 373, ஜூன் 9ஆம் நாள் இறந்தார்.
🌷🌷🌷🌷🌷🌷🌷
Monday, 7 June 2021
புனித மரியம் தெரசியா
இறைபணி செய்ய பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஒறுத்தல்கள் வழி இறைவனுக்கு உகந்தவாறு வாழ்ந்தார். கிறிஸ்துவின் 5 காயங்கள் தனது உடலில் ஏற்று கிறிஸ்துவின் துன்பத்தில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றார். பாவிகள் மனந்திரும்ப நோன்பிருந்து ஒறுத்தல் செய்தார். குணமாக்கும் வரம் பெற்றபோது நோயாளிகளை குணமாக்கினார். நற்கருணை முன் கண்விழித்து செபித்தார்.
கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன் செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். 1914, மே 14ஆம் நாள் திருக்குடும்ப துறவு சபை தொடங்கிய தெரசியா 1926, ஜூன் 8ஆம் நாள் இறந்தார்.
🌷புனித தாமஸ் ஏ கெம்பிஸ்🌷
புனித தாமஸ் ஏ கெம்பிஸ் ஜெர்மனியில் 1379ஆம் ஆண்டு பிறந்தார். 13ஆம் வயதில் பொதுவாழ்வு சகேதரர்களின் அமைப்பில் சேர்ந்து அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார். 19ஆம் வயதில் புனித அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து 1413இல் குருவானார்.
சில ஆண்டுகளில் மடத்தின் துணைத்தலைவரானார். பதவிகள் தன்னை தேடி வந்தபோது பணிவுடன் மறுத்தார். துறவு இல்லத்திலிருந்து வெளியேறாமல் 70 ஆண்டுகள் இறைவனோடு ஒன்றிணைந்து இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். எழுத்துப்பணிகள் வழியாக இறைமாண்பை எடுத்துதுரைத்தார்.
தனது இறையனுபவங்களை, இறைவனின் கருணையை நூல்கள் வழியாக வெளிப்படுத்தினார். இறையியல் நிறைந்த போதனைகள், கட்டுரைகள், காலத்திற்கும் அழியாத புகழ் பெற்ற கிறிஸ்து நாதர் அனுசாரம் என்ற நூல் எழுதினார். துறவிகளிடத்தில் அன்பு கொண்டு வாழ்ந்த தாமஸ்1471ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் இறந்தார்.
🌷🌷🌷🌷🌷🌷🌷
Sunday, 6 June 2021
புனித நார்பர்ட்
Saturday, 5 June 2021
புனித போனிஃபஸ்
புனித போனிஃபஸ் கிரெட்டன் நகரில் சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அறிவிலும் ஞானத்திலும் நல்லொழுக்கத்திலும் வளர்ந்தார். வசதியாக வாழ்ந்தபோது நிலையான இறைவனை தனதாக்க துறவு மேற்கொள்ள விரும்பினார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தந்தையின் அனுமதி பெற்று ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து 30ஆம் வயதில் குருவானார்.
திருத்தந்தையின் அழைப்பு பெற்று துரிங்கியர் மத்தியில் பணியாற்றினார். பின் பிரிசியரில் வில்லி பிரார்ட்டுடன் இணைந்து எண்ணற்றோரை திருமறையில் சேர்த்தார். போனிஃபஸின் கடின உழைப்பும், அதன் பயனையும் அறிந்த திருத்தந்தை உரோமைக்கு அழைத்து 722ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஆயராக அருள்பொழிவு செய்து ஜெர்மனியில் மறைபணி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார்.
737இல் ஆஸ்திரேலிய நாட்டு பிரதிநிதியானார். இறைவார்த்தையை வாழ்வாக்கி ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்தார். 753ஆம் ஆண்டு யூடிரெச்ட் பகுதியில் ஏராளமானோருக்கு திருமுழுக்கு கொடுத்தார். இதனால் உள்ளூர் மதவாதிகள் தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று அஞ்சி, தூயவரும் அன்பருமான போனிஃபஸ் மற்றும் அவருடன் 52 பேரையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.
Friday, 4 June 2021
புனித பிரான்சிஸ் கராச்சியோலா
Thursday, 3 June 2021
உகாண்டா மறைசாட்சிகள்
உகாண்டாவில் கிறிஸ்துவின் அரசாட்சி நிலவிட ஏராளம் மறைபணியாளர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1884, முத்தேசா என்பவர் ஆட்சி செய்தார். தனது நாட்டில் வசித்த அராபியர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் அனைவருடனும் அரசன் நல்லுறவு கொண்டிருந்தார். முத்தேசா இறந்தப்பின் இளவரசர் வாங்கா அரசரானார். தனது ஆட்சி பகுதியிலுள்ள மறைபணியாளர்களை வதைத்தார். ஒராண்டுக்குள் ஜோசப் ருகாராமா, மார்க் ககும்பா மற்றும் நோவா சர்வாங்கா ஆகிய 3 கிறிஸ்தவ பணியாளர்கள் மறைசாட்சிகளாக இறந்தனர். ஆங்கிலிகன் ஆயர் ஜேம்ஸ் ஹன்னிங்டன் என்பவரையும் கொலை செய்தனர். கிறிஸ்துவின் பொருட்டு எண்ணற்ற பணியாளர்கள் கொலையுண்டனர். 1886, ஜøன் 3ஆம் நாள் 26 பேர் மறைசாட்சியாக இறந்தனர். 45 பேருக்கு மேல் கிறிஸ்துவை அரசராக ஏற்றதால் இரத்தம் சிந்தி இறந்தனர்.